Election bannerElection banner
Published:Updated:

'தமிழ்நாட்டில் தி.மு.க. சொல்வதுதான் நடக்கிறது!' அ.தி.மு.க. தொண்டர்கள் குமுறல்!

காவல்துறை அதிகாரிகள் 19 பேரை இடமாற்றம் செய்து, தமிழக அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தது. காவல்துறையின் 19 அதிகாரிகள் மாற்றம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் சுழற்சி முறை, ஒழுங்கு நடவடிக்கை அல்லது நிர்வாக முடிவு போன்ற இடமாற்றம் போலத்தான் தெரியும். ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல. கடந்த பொதுத் தேர்தலின் (2016) போது, வடக்கு மண்டல ஐஜி- யாக இருந்தவர், தாமரைக்கண்ணன். இவர், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. தாமரைக் கண்ணனை இடமாற்றம் செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க முறையிட்டது. மறுபக்கம், 'தாமரைக் கண்ணனை மாற்றவே கூடாது' என்று அ.தி.மு.க. எம்பி.,க்கள், அதே தேர்தல் ஆணையத்தில் பதில் மனு கொடுக்கவே, தாமரைக் கண்ணன் மாற்றம் தடைபட்டது.

'தமிழ்நாட்டில் தி.மு.க. சொல்வதுதான் நடக்கிறது!' அ.தி.மு.க. தொண்டர்கள் குமுறல்!

தாமரைக்கண்ணனை மாற்றும் முயற்சியில், 2016-ல் தி.மு.க. தோற்றுப்போனது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் (2017) சமயத்தில், அதே தாமரைக்கண்ணன் சென்னையின் உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனராக கனமான பொறுப்பில் இருந்தார். தி.மு.க-வும் அசராமல் தாமரைக் கண்ணனை மாற்றச்சொல்லி, தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டுக் காத்திருந்தது. இந்த முறை காலம் கடந்திருந்தாலும் தாமரைக்கண்ணன் இடமாற்றம் உறுதியாகிவிட்டது. சிபிசிஐடி (க்ரைம்) ஐஜி-யாக மாற்றப்பட்டிருக்கிறார், தாமரைக்கண்ணன். அ.தி.மு.க. வட்டாரத்திலோ, 'தி.மு.க-வின் எண்ணம் இப்போதுதான் முழுமையாக நிறைவேறுகிறது. அதேபோல 'மத்திய அரசை யாரும் விமர்சிக்கக் கூடாது' என்று முதலமைச்சர் தரப்பு சொல்வதன் மூலம், பா.ஜ.க-வின் எண்ணமும் நிறைவேறுகிறது. நிறைவேறாதது, எங்கள் எண்ணம் மட்டும்தான்' என்று குமுறுகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு