Election bannerElection banner
Published:Updated:

அருங்காட்சியமாக மாறும் மகாத்மா காந்தி படித்த பள்ளி!

அருங்காட்சியமாக மாறும் மகாத்மா காந்தி படித்த பள்ளி!
அருங்காட்சியமாக மாறும் மகாத்மா காந்தி படித்த பள்ளி!

அருங்காட்சியமாக மாறும் மகாத்மா காந்தி படித்த பள்ளி!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி படித்த பள்ளி, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது. இந்தப் பள்ளியை அருங்காட்சியமாக மாற்றும் முயற்சியில் குஜராத் அரசு ஈடுபட்டுள்ளது. 


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், 'மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி' உள்ளது. இந்தப் பள்ளி, ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இது, 1853-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போது இந்தப் பள்ளி, 'ராஜ்கோட் ஆங்கிலப் பள்ளி' என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், 1868-ஆம் ஆண்டில் 'ராஜ்கோட் மேல்நிலைப் பள்ளி' என்றும், 1907-ஆம் ஆண்டில், ஆல்ஃப்ரெட் மேல்நிலைப் பள்ளி' என்றும், 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 'மோகன்தாஸ் காந்தி மேல்நிலைப்பள்ளி' என்றும் பெயர் மாற்றப்பட்டது.

அந்தப் பள்ளியை மியூசியமாக மாற்றுவதற்கு குஜராத் அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. அதற்காக, 12 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது. அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் தற்போது, கரன்சின்ஜி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இன்னும் ஒரு மாதத்துக்குள், மோகன்தாஸ் காந்தி மேல்நிலைப் பள்ளியை மியூசியமாக மாற்றுவதற்கான பணி தொடங்க உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு