Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒரு மகளிரைக்கூடக் காணோம்! களையிழந்த முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சி

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி  தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவர்கூட வரவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த பெண்களின் ஆதரவு, தற்போது பழனிசாமிக்கு இல்லையென்றே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வை, அவரது மறைவுக்குப் பிறகு கட்டுக்கோப்பாக வழிநடத்திச் சென்றவர், ஜெயலலிதா. கட்சியின் தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவ்வைசண்முகம் சாலையில் இருக்கிறது. இந்த அலுவலகத்துக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால், அந்தச் சாலையே மகளிர் அணியினரால் நிரம்பிவழியும். போக்குவரத்தை நிறுத்தும் அளவுக்கு மகளிர் அணியினர் குவிந்திருப்பார்கள்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒரு மகளிரைக்கூடக் காணோம்! களையிழந்த முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் மே தினத்தையொட்டி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிவடைந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. ஜெயலலிதா இருந்த காலத்தில், இந்த நிகழ்ச்சிக்கு, போயஸ் கார்டன் முதல் ராயப்பேட்டை அலுவலகம் வரை கொடி, தோரணங்கள், பேனர்கள் வைத்து அ.தி.மு.க-வினர் அமர்க்களப்படுத்துவார்கள். தொண்டர்களின் கூட்டமும் அலைமோதுவதோடு, தாரை தப்பட்டை, மேளதாளம் என ஆர்ப்பரிப்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க தலைமை அலுவலகம் கூட்டமின்றிக் களையிழந்து காணப்படுகிறது. சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், தலைமை அலுவலகத்தில் மகளிர் அணியினரைப் பார்க்க முடிந்தது. சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், அங்கு மகளிர் அணியினரின் வருகை குறைந்துவிட்டது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒரு மகளிரைக்கூடக் காணோம்! களையிழந்த முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சி

இந்தச் சூழ்நிலையில், மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்க நலிவடைந்த போக்குவரத்து ஊழியர்கள் 103 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய்  குடும்பநல நிதி உதவியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்பில் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியையொட்டி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கட்சிக்கொடிகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் இல்லாமல் தலைமை அலுவலகம் மட்டுமன்றி அந்தச் சாலையும் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒரு சம்பிரதாய விழாவாக நடத்திவிட்டு முதல்வர் பழனிசாமி சென்றுவிட்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு