Election bannerElection banner
Published:Updated:

தமிழக அரசு மீது ஆளும்கட்சி எம்.எல்.ஏ பகீர் புகார்!

தமிழக அரசு மீது ஆளும்கட்சி எம்.எல்.ஏ பகீர் புகார்!
தமிழக அரசு மீது ஆளும்கட்சி எம்.எல்.ஏ பகீர் புகார்!

தமிழக அரசு மீது ஆளும்கட்சி எம்.எல்.ஏ பகீர் புகார்!

தமிழக அரசு மீது ஆளும்கட்சியை சேர்ந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் பகீர் புகார் கூறியுள்ளார்.

சசிகலா தலைமையை பிடிக்காமல் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தார் பன்னீர்செல்வம். அவருக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ், சசிகலா அணியை சேர்ந்தவர்.

இதனிடையே, கோவை பச்சாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், வறட்சி காரணமாக தென்னை மரங்கள் வாடுவதை கண்டு மனமுடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், ஆறுமுகத்தின் குடும்பத்தினரை சந்தித்து தனது ஒரு மாத ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை நிதியாக வழங்கினார் கனகராஜ் எம்.எல்.ஏ.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை நடப்பது 100 சதம் உண்மை என்றும், முதுமையின் காரணமாக விவசாயிகள் இறப்பதும் 100 சதம் உண்மை என்றும் கூறி அதிரைவைத்தார்.

மேலும் அவர் கூறுகையில், கொடநாடு காவலாளி கொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசே காரணம் என்றும், கொடநாடு பகுதியில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.

ஏப்ரல் 13ஆம் தேதி அரசு அதிகாரிகளை கண்டித்து திருப்பூர் தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏ குணசேகரன் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது, தமிழக அரசு மீது ஆளும்கட்சி எம்எல்ஏ கனகராஜ் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு