Election bannerElection banner
Published:Updated:

'மோடியையே மிஞ்சியவர் மன்மோகன் சிங்...' - எதைச் சொல்கிறார் அமித்ஷா!?

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சதா சர்வமும் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதிலேயே குறியாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் பலவும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தன. பொதுவாகவே, நரேந்திர மோடியின் உடையில் இருந்து, அவரது பேச்சுவரை அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கும் காங்கிரஸ், இந்த விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. 

இதனால் கொதிப்படைந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா, இன்று இமாச்சல பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய போது, 'எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சிக்கின்றனர். ஆனால், தரவுகள்படி பார்த்தால் மன்மோகன் சிங் தான் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவரும். மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகமாக தெரிவதற்குக் காரணம், முன்னவர் செல்லும்போது அதைப் பற்றி யாருக்கும் தெரியாத அளவுக்குத்தான் இருந்தது', என்றுள்ளார். 

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் 25 மாதங்களில், 27 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 43 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாராம் மோடி.
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு