Published:Updated:

‘சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப்பேரவை...’ ‘வளர்ச்சி தமிழகம் வளர்மதி பேரவை..!’ இதெல்லாம்கூட நடக்கும்ல

‘சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப்பேரவை...’ ‘வளர்ச்சி தமிழகம் வளர்மதி பேரவை..!’ இதெல்லாம்கூட நடக்கும்ல
‘சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப்பேரவை...’ ‘வளர்ச்சி தமிழகம் வளர்மதி பேரவை..!’ இதெல்லாம்கூட நடக்கும்ல

முன்னாடியெல்லாம் கட்சியில ஆள் சேர்க்குறதைதான் வேலையாக வச்சிருந்தாங்க. இப்பலாம்  ஆளாளுக்கு தனித்தனியா ஒரு கட்சியை உருவாக்குறதுதான் ட்ரெண்ட். இப்ப லேட்டஸ்டா டி.டி.வி தினகரனோட ஆதரவாளர்கள் தினகரன் பேரவைன்னு ஒண்ணு ஆரம்பிச்சுருக்காங்களாம். இப்படியே போச்சுன்னா இன்னும் யார் யார்லாம் பேரவைகள் ஆரம்பிப்பாங்க, அதுக்கு என்னலாம் விளக்கம் கொடுக்கலாம்னு பார்க்கலாமா மக்களே...

சி.ஆர்.சரஸ்வதி சிறப்பு பேரவை அ.தி.மு.க : படத்துல அங்கொண்ணும் இங்கொண்ணுமா மட்டுமே நடிச்சுட்டு இருந்த சி.ஆர்.சரஸ்வதி எப்ப அதிமுக கட்சியில சேர்ந்தாங்கனு தெரியலை. ஆனா, அதுக்குப்பிறகு அவங்க பங்கு பெறாத டி வி விவாதம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலைங்கிறதுதான் உண்மை அந்த அளவுக்கு பாப்புலர் ஆஃப் தமிழ்நாடு ஆகிட்டாங்க. அதை வச்சே அவங்க தனிப்பேரவை அமைக்கலாம். கலைச்செல்வி பேரை பேரவையில வச்சிருக்கேன் கலைமகள் பேரை பேருலேயே வச்சிருக்கேன்னு ஆதரவு தாங்கனு சொல்லி பேரவை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம். 'ஸப்ப்பாடா... பேரவை ஆரம்பிச்சா அதுல பிஸி ஆகிடுவாங்க டி.வி விவாதங்களுக்குலாம் அடிக்கடி வரமாட்டாங்க'ங்கிறதுக்காகவே இவருக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதுனு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்குது மக்களே.

நாஞ்சில் சம்பத் காத்திருப்புக் கழக பேரவை: ஒரு காலத்துல இவரது பேச்சால் பலபேருக்கு நாடி நரம்புகளில் எல்லாம் நாக்குப்பூச்சியை வெளியே எட்டிப்பார்க்க வைத்துக்கொண்டிருந்தார். ஆனா இப்ப சோசியல் மீடியாவின் கலாய் க்ரூப்களுக்கு முதன்மையான கன்டென்டாக இருந்துக்கிட்டு இருக்கார். இவரது பாப்புலாரிட்டிக்கு இவரும் ஒரு பேரவையை ஆரம்பித்து வைக்கலாம். யாருமே வந்து பேரவையில சேரலைனாலும் 'அதனால என்ன, யாராவது வருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்'ங்கிற அவருடைய அந்த எப்போதும் பச்சை வசனத்தை அதாங்க அந்த எவர் க்ரீன் வசனத்தைச் சொல்லிச் சமாளிக்கலாம்.

வளர்ச்சி தமிழகம் வளர்மதி பேரவை: தனது மிரட்டலான (!) ஆக்டிவிடிகளால் குறிப்பிடத்தக்க பாப்புலாரிட்டியை வச்சிருக்க வளர்மதியும் இந்த தனிப்பேரவை லிஸ்ட்டில் ஐக்கியமானனாலும் ஆகலாம். அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை அமைதி, வளம், வளர்ச்சி. இதுல அந்த அமைதிங்கிறதை நானே கடைபிடிக்க முடியுமான்னு தெரியல. ஆனா அடுத்து இருக்குற வளர்ச்சிங்கிறதை பேரிலும், பேரவையிலும் வச்சிருக்கேன், நீங்க ஆதரவு கொடுத்தீங்கனா மீதி இருக்கும் வளத்தைக் கொண்டுவந்திடலாம் மக்களேன்னு நூதனமாக பரப்புரைகளைச் செய்யலாம்.

அம்மா அ.தி.மு.க ஆவடிகுமார் பேரவை: யார் யாரோ ஆரம்பிக்கும்போது இவர் மட்டும் ஆரம்பிக்கக்கூடாதா என்ன. அம்மா என்றால் புரட்சித்தலைவி... தங்கத்தாரகை... மாண்புமிகு இதயதெய்வம், அ.தி.மு.க என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், ஆவடி குமார் என்றால்  Armour-ed Vehicles and Ammunition Depot of india kumar என ஓபனிங்கில்  பேரவைக்கே பெருசாக ஒரு விளக்கம் கொடுத்து மொத்த வித்தையையும் காட்டலாம். ஆவடிக்கே இவ்வளவு விளக்கம் கொடுக்குறாரேன்னு மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திவிட வாய்ப்பு உள்ளது. அதை அப்படியே மெயின்டையின் பண்ணி பேரவையை பெருசாக்கலாம்.

இதெல்லாம் சும்மா ஒரு எக்ஸாம்பிளுக்குதான் மக்களே இது மாதிரி இன்னும் பலபேரு ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க யாருக்குத்தெரியும். ஆனா ஒண்ணுங்க போகிறபோக்கைப்பாத்தா புதுசா யாரையாச்சும் பாக்குறப்போ  உங்க போன் நம்பர் என்னன்னு கேட்குறமாதிரி, உங்க கட்சிப்பேரு என்னன்னு ஃபியூச்சர்ல எல்லார்கிட்டயும் கேக்குற அளவுக்குக் கொண்டுவந்திடுவாங்க போல.