Election bannerElection banner
Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டு : ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ்.  அணியுடன் கூட்டு : ஜி.கே.வாசன்
உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டு : ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டு : ஜி.கே.வாசன்

அ.தி.மு.க-வில் அணிகள் இணைப்புக்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிற வேளையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அதில் ஒரு அணிக்கு தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
 உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, எந்தக் கட்சியுடன் கூட்டணி, மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டம்  போன்றவைகுறித்து விவாதிக்க, சென்னை தி.நகரில் த.மா.கா. ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர்கள், சர்க்கிள் தலைவர்கள், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆகியோருடன் ஜி.கே.வாசன் பங்கேற்று விவாதித்தார். கூட்டம் முடிந்தபின், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தேர்தல் கூட்டணிகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ்.  அணியுடன் கூட்டு : ஜி.கே.வாசன்


'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியை  த.மா.கா. ஆதரித்தது. அதேநிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்' என்று  வாசன் பதிலளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு