Published:Updated:

அமைச்சர் வீட்டில் தங்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி!

அமைச்சர் வீட்டில் தங்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி!
அமைச்சர் வீட்டில் தங்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி!

அமைச்சர் வீட்டில் தங்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி!

அமைச்சர் வீட்டில் தங்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி!

புதுடெல்லி/மும்பை: டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மும்பை தாக்குதல்  தீவிரவாதி அபு ஜிண்டால், மகாராஷ்ட்ரா அமைச்சர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய  குற்றவாளிகளில் ஒருவரான அபு ஹம்சா சயீத் ஜபியுதீன் என்கிற அபு ஜிண்டாலை  காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டுவந்த நிலையில்,டெல்லி விமான  நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,தற்போது மகாராஷ்ட்ரா கல்வித் துறை  இணையமைச்சராக இருக்கும் ஃபவுஷியா கான்,கடந்த 2009 ம் ஆண்டு மகாராஷ்ட்ரா  சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபோது,அவருக்கு வழங்கப்பட்ட அரசு குடியிருப்பில்  தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இத்தகவலை அபு ஜிண்டாலே விசாரணையின்போது கூறியதாக டெல்லி போலீசார்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,இது குறித்து அமைச்சர் ஃபவுஷியா கானிடம் செய்தியாளர்கள்  கேட்டபோது,அரசு தமக்கு வழங்கிய குடியிருப்பில் எண்ணற்றவர்கள் தங்கிச்  சென்றதாகவும்,எனவே அவர்கள் ஒவ்வொருவரது பற்றிய அடையாளங்களை  அறிந்துகொள்வது சாத்தியமானதல்ல என்றும் கூறினார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை அதிகாரிகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிக்க  தாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கசாப்புடன் ஒன்றாக வைத்து விசாரணை

இதனிடையே மும்பை தாக்குதல் தொடர்பாக,இவ்வழக்கில் ஏற்கனவே மரணத்தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப்பையும்,அபு ஜிண்டாலையும் ஒன்றாக வைத்து விசாரிக்க மும்பை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அபு ஜிண்டாலை தங்களது காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு