Published:Updated:

எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!

எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!
எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!

இரண்டு புதிய மேம்பாலங்களை திறக்கவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் இன்று மதியம் மதுரை வந்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த யூத் பெஸ்டிவலிலும் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!


   

எடப்பாடியின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பாண்டிகோயில் ரிங் ரோடு அருகே ஆர்.பி.உதயகுமார் பிரமாண்டமாக ஏற்பாடு செய்த இளைஞர் விழாவைப்பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் விழாவை நடத்தினார்கள். கடுமையான மொட்டை வெய்யிலில் மாணவ மாணவிகளும், கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட இளைஞர்களும் வாடி வதங்கினார்கள்.மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விளையாட்டு அணியினருக்கும் விளையாட்டு சாதனங்கள் அளிக்கப்படும் என்று கூறி பலரை அழைத்து வந்திருந்தனர். அதே போல் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதாக கூறியும் இளைஞர்களை திரட்டியிருந்தனர்.

இதற்குடையே வந்திருந்த பலர் கிளம்பி கொண்டிருந்தனர். விசாரித்ததில் "விழாவிற்கு வரும் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படும் என்று கூறி அழைத்து வந்தனர் 1.30 மணி ஆகியும்  உணவு வழங்கவில்லை. அதனால்தான் கிளம்பி விட்டோம்" என்று கூறி சென்றனர். இருசக்கர வாகனம் வைத்திருந்தவர்கள் சுலபமாக கிளம்பி விட்டனர், ஆனால், தொலைதூரத்தில் இருந்து கட்சியினரால் வேனில் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் வேறு வழி இன்றி தண்ணீரை மட்டும் குடித்து நேரத்தை நகர்த்தி கொண்டிருந்தனர்.

 மதுரையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் முதல்வர் வரும்போது விழா நடக்கும் இடத்தில் அனல் அடிக்க கூடாது என்பதற்காக தண்ணீர் லாரிகள் மூலம் லிட்டர் கணக்கில் தண்ணீர் தரையில் கொட்டி வீணாக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!

இந்த நிகழ்வுக்கு மதியம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். அதன் பின் ஓய்வெடுக்க கிளம்பி சென்றார். மாலை ஆறு மணிக்கு ஆரப்பாளையம் பாலம் திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். 
உள்ளூர் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜு பேசியபின்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.


"மதுரை மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் என் வளர்ச்சி என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் அம்மா அவர்கள் போராடி போராடி மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். மதுரை மக்களுக்கு மீனாட்சி அம்மனைப்போல அம்மாவையும் நினைக்க வேண்டும்.

தமிழை சொல்லி அரசியல் செய்தவர்கள் மக்களை ஏமாற்றினார்கள். ஆனால், ஜெயலலுதாதான் தமிழுக்காக நிறைய சேவைகள் செய்தார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உலக தமிழ்சங்கத்தை ஏற்படுத்தினார்.  ஏற்கனவே மதுரைக்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றாப்பட்டிருந்தாலும். மீண்டும் பல திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சிடைகிறேன். அம்மாவின் ஆசைப்படியும் இந்த அரசு மக்களுக்காக செயல்படும்.  பறக்கும் பாலம் உட்பட இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்த இறுதி வடிவம் எட்டப்பட்டுள்ளது.  அம்மாவின் அரசு மதுரை மக்களுக்கு என்றும் துனையாக இருக்கும். 

எடப்பாடி பழனிசாமி சொன்ன புறாக்கதை...!


கழக தோழர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்களை செயல்படாத அரசு என்கிறார்கள். என்னிடம் வரும் கோப்புகளில் உடனே கையெழுத்திட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு நான் முழுமையாக ஓத்துழைத்து வருகிறேன். இந்த ஆட்சிக்கு எதிராக சிலரின் பகல் கனவு பலிக்காது. இந்த அரசு தொடரும். வரலாறு காணாத வறட்சிக்கு தேவையான நிதி எவ்வளவு வேண்டுமானாலும் ஒதுக்கப்படும். குவாரிகளை இனிமேல் அரசே ஏற்று நடத்தும். மணல் அள்ளுவது, அதை யார்டில் சேமித்து வைத்து விற்பனை செய்வது இரண்டையும் அரசே செய்யும். மணல் விலை குறைக்கப்படும். மணலுக்காக மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதற்காக இந்த ஏற்பாடு. மக்கள் எம் சான்ட் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். இன்னும்  மூன்று ஆண்டுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்படும். மணல் இருந்தால்தான் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். இனிமேல் அனைவரும் எம் சான்ட்  பயன்படுத்தவும்" என்றவர், ஜெ. பாணியில் ஒரு குட்டிக்கதையும் சொன்னார்.


"தினமும் வலை விரித்து வேடன் ஒருவன், புறாக்களை பிடித்து செல்வான். ஒருநாள் அப்படி வலை வீசியபோது பல புறாக்கள் சிக்கிக் கொண்டது.  சில புறாக்கள் தப்பித்து விட்டது. இருந்தாலும் சிக்கிக்கொண்ட புறாக்களை மீட்க வேண்டுமென்று நினைத்த வெளியிலிருந்த புறாக்கள், அவைகளும் அந்த வலைக்குள் நுழைந்து கொண்டு, அந்த வலையை அப்படியே தூக்கி சென்றன. அதுபோல் நாம் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கலாம்." என்றார். 


ஏன் இந்த கதை? எதற்கு இந்த கதை? என்று புரியாவிட்டாலும் கட்சியினர் கை தட்டினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு