Published:Updated:

சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!

சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!
சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!

சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!

சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத்தும், தில்லாலங்கடி ஐ.ஜி. கோகுல்நாத்தும் அந்த சிவப்புடைரியை கைப்பற்ற கல்லறை ஒன்றில் நடத்தும் போராட்டமும்,  செத்துப்போன டான் 'பில்லா'வின் இடத்தில் 'பில்லா'வாக வந்த ராஜப்பாவின் அந்த நேரத்து பரிதவிப்பும் தமிழக அரசியலில் 'லைவ்' ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஆரம்பித்து ஆந்திரா, கர்நாடகா என்று கான்ட்ராக்ட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டி என்பவரிடமும் இப்போது அதேபோல் ஒரு டைரி இருக்கிறது... அந்த டைரியில் உள்ள தகவல்கள் தான் பல மந்திரிகளின், அரசு உயர் அதிகாரிகளின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. பொதுப்பணித் துறை கான்ட்ராக்டராக இருந்த சேகர் ரெட்டியின் வீட்டில், வருமானவரித் துறை நடத்திய சோதனையின் அடுத்த எபிசோடுதான் இப்போது போய்க் கொண்டிருக்கிறது. சேகர் ரெட்டி வீட்டில் 147 கோடி ரூபாய் ரொக்கம், 178 கிலோ தங்கம் தவிர புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே 34 கோடி ரூபாய்க்கு சிக்கியது பழைய கதை. சேகர் ரெட்டி பயன்படுத்திய கணக்கு வழக்கு டைரியின் பக்கங்கள்தான் இப்போது புதிய கதையாக 'பில்லா' பட ரேஞ்சுக்கு பாடாய்ப்படுத்த ஆரம்பித்துள்ளது. 
 
சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில்தான் அன்று, கூட்டாளிகளான  பிரேம்குமார், ஶ்ரீனிவாசலு சிக்கினர். டைரியின் அடுத்தடுத்த பக்கங்கள் காட்டிக் கொடுத்ததில் ரத்தினம், ராமச்சந்திரன், அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி, பரஸ்மால் லோதா மற்றும் ஆடிட்டர் பிரேம்குமார் என பலர் பிடிபட்டனர்.  அரசின் கான்ட்ராக்ட்களைக் குறைந்த 'ரேட்'டில் பெற சேகர் ரெட்டி மற்றும் அவர் கூட்டாளிகளிடம் பலர், கமிஷன் பெற்ற தகவல், வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்தநிலையில் ஐ.டி-யிடம் சிக்கிய 'டைரி' பலரை அடையாளம் காட்டியிருக்கிறது. மந்திரிகள், எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட கமிஷன் தொகை எவ்வளவு என்ற விவரங்களை நேரம் காலத்தோடு குறிப்பிட்டு சேகர் ரெட்டியும், அவரது ஆட்களும் கணக்கு எழுதிவைத்துள்ளனராம். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் துறை ரீதியான சார்பு அதிகாரிகள் வாங்கியுள்ள கமிஷன் குறித்த விவரங்கள் தெளிவாக அந்த டைரியில்  குறித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2013 மே, 8-ம் தேதியன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'பான்மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்கத் தடை விதிக்கப்படுவதாக' சட்டசபையில் அறிவித்தார். அதேவேளையில், சென்னை மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள கிடங்குகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அங்கே, கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் சிக்கின. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்தக் கிடங்குகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் 'மாமூல்' கொடுத்து இயங்கிவந்ததையும் கண்டுபிடித்தனர். சென்னை மாநகரில் உயர்பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் பான்மசாலாப் பொருட்கள் விற்கப்பட்டதும் இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஐ.டி துறையினர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓர் அறிக்கையை அனுப்பினர். 'ஆண்டுக்கு ஐநூறு கோடி ரூபாய்க்குக் குறையாமல் இதன்மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக' அந்த அறிக்கையில் கூறியிருந்தனர். வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டியிடம் இப்போது கிடைத்ததுபோல அப்போதும் ஒரு ரகசிய டைரி கிடைத்தது. போலீஸ் அதிகாரிகளின் பதவிக்கேற்ப வார, மாத அடிப்படையில் லஞ்சத்தை 'மாமூல்' ஆக பான்மசாலா விற்பனையாளர்கள் வழங்கி வந்த விபரம் அந்த டைரியில் இருந்தது. இதையும் வருமானவரித் துறை அதிகாரிகள் அப்போதே தமிழக அரசுக்குக் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தனர். ஐ.டி. அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'இதுகுறித்து உரிய விசாரணைக்கும் உத்தரவிடுவதாக' கூறி இருந்தார்.


                                                           

சேகர் ரெட்டியின் இரண்டாவது டைரியில் என்ன இருக்கிறது!

அப்போதிருந்த போலீஸ் டி.ஜி.பி அசோக்குமாரும், சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். "அந்த ஐ.பி.எஸ் அதிகாரிதான் இந்த பான்மசாலா விற்பனையை 'ஓப்பன் மார்க்கெட் அளவுக்கு கொண்டு    போய்விட்டார்'' என்று கடிதத்தில் சொல்லியிருந்தார். அப்படி அவர் கடிதம் அனுப்பிய கொஞ்ச நாள்களிலேயே, 'விருப்ப ஓய்வில் வீட்டுக்குப் போவதாக' அதே அசோக்குமாரே ஜெயலலிதாவுக்கு இன்னொரு கடிதத்தை அனுப்பிவிட்டுக் கிளம்பிவிட்டார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக, டிசம்பர், 26, 2016 அன்று சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்.ஜார்ஜ், "பான்மசாலா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து நேர்மையான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார். டி.ஜி.பி. அசோக்குமார், முதல்வருக்குக் கடிதம் எழுதிய கொஞ்ச நாள்களில் அதேபோன்ற ஒரு கடிதத்தை, கமிஷனர் ஜார்ஜும் எழுதவே, 'பான்மசாலா' விவகாரம் பெரிய அளவில் பரபரப்பானது. இப்போது அதே பழைய பான்மசாலா விவகாரமும், அதனுடன், பொதுப்பணித் துறையின் ஒப்பந்தப் பணிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி ஆணை வழங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மந்திரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பெயர்ப் பட்டியலையும், ஆதாரத்தையும் வருமானவரித் துறையினர் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். வீட்டைக் காலிசெய்கிற கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட மந்திரி காமராஜ் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என்று கோர்ட் பலமுறை கேட்டபின்னரே, மந்திரி காமராஜ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் சாதாரணமானவராக இருந்தால் இந்நேரத்துக்கு அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பார்கள். அவரிடம் இன்னும் விசாரிக்க வேண்டும் என்று போலீஸார் கோர்ட்டில் கஸ்டடி கேட்டிருப்பார்கள். ஆனால், வழக்கில் சிக்கிய மந்திரி காமராஜ் பலதிட்டப் பணிகளை இன்னமும் ரிப்பன் வெட்டி திறந்துவைத்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் சொன்னதைக் கேட்கவே யோசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருமானவரித் துறை சொன்னதையாவது கேட்பாரா ?
 

அடுத்த கட்டுரைக்கு