Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

'குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை, வேற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தங்கள் காதல் வலையில் விழவைக்கிறார்கள்’ என்ற காரணத்தை முன்வைத்து, ஒரு வகையான சமூக இறுக்கம் உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகரில் நீண்ட நாட்களாகப் புகைந்துவருகிறது. ஒரு காதல், அதையடுத்து ஒரு கொலை, அதற்குப் பழிவாங்க இரண்டு கொலைகள்... என்று ஆரம்பித்த கலவர நெருப்பு, இரண்டு மாத காலமாகியும் இன்னும் கனன்றுகொண்டு இருக்கிறது. அடர்த்தியான திராவகத்தைவிடவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய இதுபோன்ற கலவரங்களை தங்களின் அரசியல் லாபங்களுக்காக ஆட்சியாளர்களும் எதிர்க் கட்சியினரும் கையாளும் விதத்தைப் பார்க்கும்போது பதற்றம் அதிகமாகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்ட நரேந்திர மோடியும், அவரின் போட்டியாளரான ராகுல் காந்தியும், உ.பி-யில் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் முலாயம் சிங் கட்சியினரும்... ஆளுக்கு ஆள் வெறுப்புத் தீயை விசிறிவிட்டு அரசியல் குளிர்காய்வதை என்னவென்று சொல்வது?

'தீவிரவாதத்துக்கு என் பாட்டி பலியானார்; என் தந்தையையும் இழந்தேன்; ஒருநாள் அது என்னையும் பலிகொண்டுவிடும் என்பது எனக்குத் தெரியும்’ என்று உணர்ச்சியைக் கொப்பளிக்கவைக்க, தேர்தல் ஜுரத்தில் ராகுல் காந்தி பிதற்றுகிறார்.

இன்னொரு புறம் நரேந்திர மோடி பேசச் சென்ற பாட்னாவின் மைதானத்திலும், அதைச் சுற்றியும் அடுத்தடுத்து ஆறு குண்டுகள் வெடித்து, பல உயிர்கள் பலியாகின. 'பொதுக்கூட்டம் வேண்டாம்’  என்ற போலீஸாரின் அறிவுரையையும் மீறி, தன்னை ஒரு மாவீரன் என்று காட்டிக்கொள்ள மோடி அதே மைதானத்தில் வீர உரை நிகழ்த்தினார்.

பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் நெரிசலான அந்த மைதானத்தில் பெரிய அசம்பாவிதம் நிகழ, வெடிகுண்டுகள்கூட வேண்டாம்; சிறிய ஒரு வதந்தி கசிந்தாலே விளைவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை, அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்தானே நாம். தங்களுடைய அரசியல் லாபத்துக்காக நமது அரசியல்வாதிகள் பல உயிர்களைப் பணயம் வைப்பதைப் பார்க்கும்போது அடிவயிற்றில் சுரீர் என்கிறது.

ஒன்றே ஒன்றுதான் தலைவர்களே... உங்களை எல்லாம் வாக்காளன் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறான்.