Published:Updated:

வெங்கைய நாயுடுவிடம், எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் இவைதாம்..!

குருபிரசாத்
வெங்கைய நாயுடுவிடம், எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் இவைதாம்..!
வெங்கைய நாயுடுவிடம், எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் இவைதாம்..!

சென்னை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, இதை துவங்கி வைத்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் வெங்கைய நாயுடு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, நிதி கேட்டு எடப்பாடி பழனிசாமி, வெங்கைய நாயுடுவிடம் மனு அளித்தார்.

வெங்கைய நாயுடுவிடம், எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் இவைதாம்..!

இதன் பிறகு வெங்கைய நாயுடு, எடப்பாடி பழனிசாமி ஆகியோர், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது வெங்கைய நாயுடு கூறுகையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு உதவும். மாநில அரசு திட்டமிட்டால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக நிதி ஒதுக்க பிரதமர் உறுதி அளித்துள்ளார்.


அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.11,237 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிரதமரின் வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு ரூ.1083.34 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.420 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 லட்சம் கழிப்பறைகள் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளன. 

சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. 20 சதவிகிதம் நிதியை சீர்திருத்தங்களுக்குத் தருகிறோம். பணி சிறப்பாக இருந்தால், மேலும் 20 சதவிகிதம் நிதியை வழங்குவோம்" என்றார்

வெங்கைய நாயுடுவிடம், எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் இவைதாம்..!


இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம்.


முக்கியமாக,, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் அடையாறு, கூவம், பக்கிங்காம் குடிசை வாழ் மக்களுக்கு, மத்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் கட்டுவதற்காக, ரூ.5 ஆயிரம் கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.


சென்னையில் 2 லட்சம் குடும்பங்கள் நீர் நிலைகள் அருகே வசிப்பதாக கண்டறிந்தோம். அவர்களுக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.