Published:Updated:

'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் : லாலு கிண்டல்!

'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் :  லாலு கிண்டல்!
'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் : லாலு கிண்டல்!

தன்னை ராமராகவும், நாட்டு மக்கள் தனக்கு அடிபணிந்த அனுமராகவும் இருக்கவே மோடி விரும்புகிறார் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் :  லாலு கிண்டல்!

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர்  லாலு பிரசாத் யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மோடி தன்னை சர்வாதிகாரி போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். அவரை கடவுள் ராமர் போலவும், மக்களை எந்த கேள்வியும் கேட்காமல் அடிபணியும் அனுமார் போலவும், மாற்ற முயற்சிக்கிறார் எனக் கூறியுள்ளார் லாலு. மேலும் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும்" அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியில், நடைபெறும் குழப்பங்கள் குறித்து பதிலளித்த லாலு பிரசாத் யாதவ்,' கபில் மிஷ்ரா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தான் கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டுகிறார். அவர் நேர்மையானவராக இருந்தால் ஆம் ஆத்மியில் இருக்கும்போதே காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.