Published:Updated:

இந்தியாவின் நீளமான பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!

இந்தியாவின் நீளமான பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!
இந்தியாவின் நீளமான பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!

இந்தியாவின் நீளமான பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!

இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மே 26 அன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவின் நீளமான பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!

இந்தியாவின் மிக நீளமான தோலா சடியா பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ளது. அஸ்ஸாம்- அருணாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சடியா பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் நீளமான பாலமாகக் கருதப்படும் தோலா சடியா பாலம் 9.15 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் சுமார் 950 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அஸ்ஸாமில் ஆட்சியமைத்துள்ள பாஜக சார்பில் பிரதமர் மோடி இம்மாதம் 26-ஆம் தேதி தோலா சடியா பாலத்தைத் திறந்து வைக்கிறார். 60 டன் எடையுள்ள ராணுவ பீரங்கிகளைத் தாங்கும் அளவில் இப்பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் நோக்கில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளன. 

அடுத்த கட்டுரைக்கு