Published:Updated:

மீனவர்கள் பிரச்னைக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை: விஜயகாந்த்

மீனவர்கள்  பிரச்னைக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை: விஜயகாந்த்
மீனவர்கள் பிரச்னைக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை: விஜயகாந்த்
மீனவர்கள்  பிரச்னைக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை: விஜயகாந்த்

தருமபுரி: இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்னைக்கு, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் மட்டும் பயனில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தருமபுரியை அடுத்த குண்டலப்பட்டியில் கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.எங்களால் ஆட்சியைப் பிடித்துவிட்டு இப்போது இஷ்டம்போல பேசி வருகின்றனர்.பதவிக்காக தலை குனிய வேண்டியவர்கள் அதிமுகவினரே.தேமுதிக எம்எல்ஏக்கள் தலை நிமிர்ந்து செயல்படுகின்றனர்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்காது என சூளுரைத்தனர்.ஆனால், இந்த இரண்டுமே நடைபெறவில்லை.தேமுதிக 30 ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்று டெபாசிட் பெற்றது.உண்மையில் தோல்வியடைந்தது அதிமுகவே.

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசுக்குக் கடிதம் மட்டுமே எழுதப்பட்டது.இப்போதைய அதிமுக ஆட்சியிலும் கடிதம் எழுதுவது தொடர்கிறது. ஆனால்,மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.

தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். ஆனால்,அடுத்து வந்த திமுக,அதிமுக ஆட்சிகளில் முறைகேடுகள் தொடர்கதையானது.தமிழகத்தில் அடுத்து தேமுதிக ஆட்சி அமையும்"என்றார்.