''நகராட்சி கமிஷனர் என்னை மிரட்டி மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கிறார். அதனால், நகர்மன்றப் பணிகள் முடங்கி கிடக்கிறது'' - தேவக்கோட்டை நகராட்சியில் இருந்துதான் இப்படி ஒரு குரல். புகார் வாசிப்பது நகராட்சி சேர்மன் சுமித்ரா ரவிக்குமார் என்பதால், தேவக்கோட்டை வட்டாரமே அதிர்ந்து கிடக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்மன்றத் தலைவராக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சுமித்ரா ரவிக்குமார். துணைத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சுந்தரலிங்கம் உள்ளார். தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஏழாம் பொருத்தம். அதனால், மொத்தம் உள்ள 27 வார்டு கவுன்சிலர்களும் இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். இந்த நகராட்சிக்கு கமிஷனராக எட்டு மாதங்களுக்கு முன் திருவாரூரில் இருந்து மாறுதலாகி வந்தார் சரவணன். இவர் மீதுதான் அடுக்கடுக்கான புகார்களை ஆளும் கட்சியைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவரே வாசித்துள்ளார்.

இந்த நிலையில் சுமித்ராவைச் சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எனக்கும் துணைத் தலைவருக்கும் பிரச்னை இருந்து, அது இப்போது பேச்சுவார்த்தை மூலம் சரியாகி உள்ளது. இந்த நிலையில், எட்டு மாதங்களுக்கு முன்பு கமிஷனர் சரவணன் மாறுதலாகி வந்தார். ஆரம்பத்தில் நகராட்சி விவகாரங்களில் ஆர்வமாக செயல்பட்டார். நாட்கள் செல்லச் செல்ல அவரது நடவடிக்கைகளில் மாற்றம்.

சில மாதங்களுக்கு முன் அவர், தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி ஒருவரோடு இணைந்துகொண்டு, தேவகோட்டை நகர்மன்றப் பகுதி முழுவதும் ஒரு ஃப்ளெக்ஸ் வைத்தனர். அதில், அன்-அப்ரூவல் இடங்களுக்கு நகராட்சி அனுமதி தராது. எனவே, பொதுமக்கள் அன்-அப்ரூவல் இடங்களை வாங்க வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் சில நாட்களில், அதுபோன்ற அனுமதி இல்லாத இடங்களுக்கு அவர்களே கட்டட அனுமதி அளித்தனர். அதுகுறித்து எனக்கு புகார் வரவே, அப்ரூவல் கொடுத்த ஃபைல்களை கமிஷனரிடம் கேட்டேன். ஆனால், அவர் அதைத் தர மறுத்தார். 'சேர்மன் ஃபைல் பார்க்கணும்னா, அவர் மட்டும் என் அறைக்கு

வந்து பார்த்துக்கட்டும்’ என்று நோட் போட்டு அனுப்பிவிட்டார். அதற்குப் பின்னர் தொடர்ந்து எனக்கு எதிரா செயல்பட ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் எந்த நகராட்சியிலும் இதுவரை துணைத் தலைவருக்கு என்று அறைகள் இல்லை. ஆனால், துணைத் தலைவருக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருக்கார். அதோட, எந்த அதிகாரிகளை நான் கூப்பிட்டாலும் அவரிடம் கேட்டுட்டுதான் என்னைப் பார்க்கணும் என்று சொல்லி மிரட்டியிருக்கார். கேக்காம வந்து என்னைப் பார்த்த நகராட்சி மேலாளருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கார். அதனால் எந்த அதிகாரிகளும் என்னை சந்திக்கவே பயப்படுறாங்க. கூட்டம் நடத்த மினிட் புக்கூட கொடுக்காம பிரச்னை பண்றார். மக்கள் பிரதியான என்னை அவமானபடுத்தும் விதமா நடக்கிறார்.

கவுன்சிலரின் தம்பி ஒருவருக்கு, தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அனுமதி வேண்டி மன்றத்துல தீர்மானம் வைக்க, இவர் நிர்ப்பந்தம் பண்றார். இவரால நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன். என்னால எந்தப் பணியுமே செய்ய முடியலை. முடங்கிப் போயிருக்கேன்'’ என்று கலங்கிய கண்களுடன் வேதனையைக் கொட்டித் தீர்த்தார்.

கமிஷனர் சரவணனைச் சந்தித்தோம். ''நகர்மன்றக் கூட்டம் கூட்டும் அதிகாரம் எனக்குதான் உள்ளது. ஆனால், எனக்கே நகர்மன்றக் கூட்டம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அதிகாரிகள் எப்படி போக முடியும். அதான் மினிட் புக் அவர்களுக்குப் போகவில்லை. என்னுடைய நடவடிக்கையில் உள்நோக்கம் இல்லை. நான் சரியாக நடப்பது, அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையை, டெண்டர் இல்லாம ஒதுக்கித் தரச் சொன்னாங்க. அதற்கு நான் மறுப்புத் தெரிவித்தேன். இது மாதிரி விஷயங்களால்தான் என் மீது புகார் சொல்றாங்க. துணைத் தலைவருக்கு என்று அறை ஒதுக்கவில்லை. கவுன்சிலர்கள் வெயிட்டிங் அறைதான் ஒதுக்கியுள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

தேவக்கோட்டை விவகாரம் 'கோட்டை’ வரை புகாராக சென்றுள்ளதால், இருவரில் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் குட்டு விழும்!

- அபுதாஹிர், படங்கள்: சாய்.தர்மராஜ்