எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நேரு, படேல் போன்ற தலைவர்களைப் பற்றிய பழைய சம்பவங்களை அத்வானி கிளறிக்கொண்டிருப்பது ஏன்?

இரண்டு காரணங்கள். அவருக்கு அறிவிக்கப்படாத ஓய்வை பி.ஜே.பி. கொடுத்துவிட்டது. அதனால், பழையவற்றை அசைபோடுகிறார். தன்னுடைய கட்சி மூலவர்களான வீர சாவர்க்கர், ஹெக்டேவார், கோல்வார்க்கர் போன்றவர்களைப் பற்றி எழுதினால் அந்தளவுக்கு பிரபலம் ஆகாது. எனவேதான் காங்கிரஸ் தலைவர்களின் பழைய கதைகளைக் கிளறுகிறார்.

ரேவதிப்ரியன், ஈரோடு-1

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கியுள்ளாரே ஜெயலலிதா?

தற்காலிகமாக!

எஸ்.எஸ்.சுந்தரம், புதுவண்ணை.

ஏற்காடு இடைத்தேர்தலில் கடந்த முறை வாங்கியதை விட தி.மு.க-வுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்குமா?

தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிடாததால், அவர்களது வாக்குகள் தி.மு.க-வுக்குக் கிடைக்கலாம். அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக தி.மு.க-வுக்கு கிடைக்கும். அந்த அடிப்படையில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறலாம். தேர்தலுக்கு முன்னதாக கருணாநிதி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். 'அ.தி.மு.க-வை வீழ்த்துவதற்கு நாம் ஒரே அணியில் திரள வேண்டும். தி.மு.க-வின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அதனை அனைத்துக் கட்சிகளும் நிராகரித்தன. ஆனால், இன்று அந்தக் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்காததால், தங்களது கட்சி வாக்குகள் மறைமுகமாக தி.மு.க-வுக்குப் போய் சேரும் வகையில் செயல்பட்டுவிட்டனர். இது ஒருவகையில் கருணாநிதிக்கு சாதகமானதுதான்!

கு.நீலமேகம், விழுப்புரம்.

அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கக் கூடாத கேள்வி எது? பதில் சொல்ல முடியாதது எது?

முன்பு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிக் கேள்வி கேட்டால், கோபம் வரும். சொத்துக் கணக்கை கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

'சி.பி.ஐ. ஒன்றும் கூண்டுக்கிளி அல்ல’ என்கிறாரே ப.சிதம்பரம்?

அவர் சொல்வதை நம்பித் தலை ஆட்டுவதற்கு மக்கள் அனைவரும் கிளிப்பிள்ளைகள் அல்ல!

பஞ்சவண்ண மகன், கருப்பம்புலம்.

வகுப்பறைகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டுவந்தால் மட்டும் நாட்டில் கொலை, கொள்ளை, களவு போன்ற சம்பவங்கள் குறைந்துவிடுமா என்ன?

நீதிபோதனைகளை தங்களது பிள்ளைகளுக்குப் பெற்றோர் வழங்க வேண்டும். அந்தக் கடமையை பள்ளிகளும் செய்யலாம். இந்த இரண்டு இடங்கள் தவிர, வேறு எங்கும் நீதியைப் போதிக்க முடியாது!

பாபு வசந்தன், மதுரை.

காமராஜரைப் போல பிரதமர் பதவியை நிராகரித்தவர்கள் வேறு யாராவது உண்டா?

துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவும் பிரதமர் பதவியை நிராகரித்தவர்தான்!

1991-ல் துணை ஜனாதிபதியாக சங்கர் தயாள் சர்மா இருந்தார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அப்போது யாரை பிரதமர் ஆக்குவது என்று சோனியா வீட்டில் ஆலோசனை நடந்தது. சங்கர் தயாள் சர்மாவை காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் ஆக்கலாம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது. அவரிடம் பேசுவதற்காக அருணா ஆசஃப் அலியையும் நட்வர்சிங்கையும் சோனியா அனுப்பிவைத்தார். ''என் மீது சோனியா இவ்வளவு மரியாதை வைத்துள்ளாரா? இது என்னை உருகவைத்துவிட்டது'' என்று சர்மா சொன்னதும், அவர் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார் என்று இவர்கள் இருவரும் நம்பிவிட்டார்கள்.

அடுத்துச் சொன்னார், ''இந்தியாவின் பிரதமர் பதவி என்பது முழுநேரப் பதவி. இந்தியாவின் மிக முக்கியமான பிரதமர் பதவியை நான் வகிப்பதை நியாயப்படுத்த, எனது வயதும் உடல்நிலையும் இடம் அளிக்காது. இத்தகைய பொறுப்பை ஏற்க முடியாத நிலையில் நான் இருப்பதற்கான காரணங்களை சோனியாவிடம் தெரிவித்துவிடுங்கள்'' என்று சொன்னார். ''இந்தியாவின் பிரதமர் பதவியையே வேண்டாம் என்று கூறி ஒதுக்கித்தள்ளும் முடிவை, தன்னம்பிக்கையும் நேர்மையும் உள்ள ஒருவரால்தான் எடுக்க முடியும்'' என்று நட்வர் சிங் பிற்காலத்தில் எழுதினார்.

சர்மா நிராகரித்த அந்த வாய்ப்புதான் நரசிம்ம ராவுக்குப் போனது!

குமரகுரு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாராமே?

காங்கிரஸ் மீது பற்றுகொண்டு சேர்ந்தார் என்பதைவிட தி.மு.க. மீதான கோபத்தில் ஜெயகாந்தன் சேர்ந்தார் என்பதே உண்மை. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஜெயகாந்தனை, காமராஜரைப் பார்க்க அழைத்துச் சென்றவர் பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான கே.பாலதண்டாயுதம். முதலில் தயங்கிய ஜெயகாந்தன், பிறகு காமராஜரைச் சந்தித்தார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தது. தி.மு.க. முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலகட்டம் அது. தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகள் சேர்ந்து தேசிய அணி அமைத்தபோது, அந்த மேடைகளில் ஜெயகாந்தனின் பேச்சு முக்கிய இடம் பிடித்தது. கே.பாலதண்டாயுதம், ஈ.வெ.கி.சம்பத், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகிய நால்வரும் அந்த மேடைகளில் இருந்தார்கள்.

''நீங்கள் கட்சியில் உறுப்பினராக ஆகிவிடுங்களேன்'' என்று அன்றைய காங்கிரஸ் பிரமுகர் எம்.கே.டி.சுப்பிரமணியம் சொல்ல... ஜெயகாந்தன் சம்மதித்தார். 13.04.1968 அன்று உறுப்பினராகச் சேர்ந்தார் ஜெயகாந்தன். அதற்கான விண்ணப்பத்தில் ஜெயகாந்தன் பெயரை சிபாரிசு செய்பவராக காமராஜர் கையெழுத்துப் போட்டார். காமராஜர் மறைவுக்குப் பிறகு ஜெயகாந்தனின் ஆர்வம் குறைந்தது. எப்போதாவது மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தியுடன் மேடைகளில் தோன்றினார்.

எதுவாக இருந்தாலும் அவரது படைப்புகளை, இந்த அரசியல் பாதிக்கவில்லை!