மதுரை ரத்தத்தின் ரத்தங்களுக்குள் ஒரு ரத்தச் சண்டை!

சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான கருப்பையா மீது, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரனின் ஆட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக புகார். அந்தத் தாக்குதலில் எம்.எல்.ஏ-வைக் காப்பாற்றச் சென்ற நிலவள வங்கி இயக்குனர் பங்களா மூர்த்தி வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எப்போதும் மதுரை தி.மு.க-வில்தான் இந்த மாதிரியான காட்சிகள் நடக்கும். இப்போது அ.தி.மு.க-வில் நடந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்த பங்களாமூர்த்தியிடம் பேசினோம். ''ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. கருப்பையாவை மதிக்கிறது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்குக்கூட மரியாதைக் கொடுக்காமல், அவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். சம்பவத்தன்று எனது லாட்ஜில் நானும் எம்.எல்.ஏ. கருப்பையாவும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, ரவிச்சந்திரன் தனது ஆட்களோடு அங்கு வந்தார். சத்தம் கேட்டு நான் வெளியே வர, 'எங்கடா உங்க எம்.எல்.ஏ.’ என்று கேட்டனர். விபரீதத்தைப் புரிந்துகொண்டு, 'எம்.எல்.ஏ. இங்கு இல்லை’ என்று சொன்னேன். லாட்ஜ் ஊழியர்கள் அதற்குள் எம்.எல்.ஏ-வை பத்திரமாக ரூமுக்குள் போட்டு பூட்டிவிட்டனர். வந்த ஒன்றியச் செயலாளர் ஆட்கள், என்னை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கினர். நான் மயங்கி சரிந்துவிட்டேன்'' என்றார் சோகமாக.

எதற்காக அடித்தார்கள் என்று ரவிச்சந்திரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''இந்த ஏரியாவில் ரவிச்சந்திரன்தான் சீனியர். ரவிச்சந்திரன்தான் கருப்பையாவை எம்.எல்.ஏ-வாக ஆக்கினார். ஆனால், அவர் ரவிச்சந்திரனை மதிக்கிறதே இல்ல. அலங்காநல்லூர் சாத்தையார் அணைகட்டில் தூர்வாரும் பணி டெண்டரை, ரவிச்சந்திரனை மீறி வேறு ஒருவருக்குத் தந்துவிட்டார். போனால் போகுது என்று விட்டுவிட்டோம். அணையில் அள்ளும் மணலை வேறு ஒருவருக்குத் தந்தபோதுதான் பிரச்னையாகிவிட்டது. இதுபற்றி கேட்டதற்கு, ரவிச்சந்திரனிடம் தகாத முறையில் பேசிவிட்டார். அதனால்தான் கோபத்தில் இப்படி நடந்துவிட்டது'' என்றனர்.

கருப்பையா ஆதரவாளர்களிடம் பேசியபோது, ''இந்த ஏரியாவில் எந்த கான்ட்ராக்ட், அரசு ஒப்பந்தம், சாலை போடும் பணி, பொதுப்பணித் துறை வேலைகள் என்று எது வந்தாலும் ரவிச்சந்திரன்தான் எடுப்பார். சாத்தையார் அணையில் அவருக்கு டெண்டர் தரவில்லை என்று, வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டார். அது சம்பந்தமாக போனில் எம்.எல்.ஏ. கேட்டபோது, வார்த்தைகள் முற்றியது. அதுதான் தாக்குதலுக்குக் காரணம்'' என்றனர்.

எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் பேசினோம். ''நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதுபற்றி சொல்ல எதுவும் இல்லை. அம்மா என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ... அதற்காக காத்திருக்கிறேன்'' என்றார்.

ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம். ''அந்த அணையில் மண் அள்ளுவது தொடர்பாக ஏற்கெனவே பிரச்னைகள் நிலவுகிறது. இந்த நிலையில், தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு எம்.எல்.ஏ. கான்ட்ராக்ட் பெற்றுத் தந்துவிட்டார். அதோடு, எனக்கு போன் செய்து அசிங்கமாகத் திட்டினார். இதைக் கேட்கச் சென்றபோது, தள்ளுமுள்ளு நடந்துவிட்டது. மற்றபடி யாரையும் அடிக்கவில்லை. என் மீது சொல்லப்படும் பிற குற்றச்சாட்டுகளும் பொய்யானவைதான்'' என்றார்.

முதல்வர் ஜெயலலிதா சாட்டையை எடுக்க வேண்டிய தருணம் இது!

- சண்.சரவணக்குமார்

படம்: பா.காளிமுத்து