'சென்னையில் நாங்கள் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் அமைத்துக்கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்’- முதல்வரின் தனிப்பிரிவுக்கு இப்படி ஒரு கோரிக்கை மனு கடந்த வாரத்தில் வந்திருக்கிறது. மனுவைப் படித்த அதிகாரிகள் அதிர்ந்தாலும், அதை உயரதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பிவிட்டனர்.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்த மனுவை அனுப்பிய, 'இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர் சங்க’த்தின் தலைவி பேபியிடம் பேசினோம். ''ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டோம். உடலால் வரும் பாதிப்பைவிட மனதால் ஏற்படும் பாதிப்புகள்தான் எங்களுக்கு அதிகம். இந்தத் தொழிலில் இருக்கும் கஷ்டம் எதுவும் யாருக்கும் புரியாது.

ஒரு பக்கம் போலீஸ்... இன்னொரு பக்கம் ரௌடிகள் என்று எங்களை துரத்துவார்கள். மாமூல் கொடுத்தாலும் எங்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடுவதில்லை. போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் பல பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு பாலியல் நோய்களில் சிக்கிக்கொள்கின்றனர். இதைத் தடுக்க வேண்டுமானால் மும்பை, கொல்கத்தா போல சென்னையிலும் பாலியல் தொழிலுக்கு

என்று தனியாக இடம் ஒதுக்க வேண்டும். நாங்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியதும் அதிகாரிகள் எங்களுடன் பேசினார்கள். போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கச் சொன்னார்கள். அங்கேயும் கொடுத்திருக்கிறோம். நல்ல முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்று சொன்னார்.

அகில இந்திய பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கான கூட்டமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் கீதாவிடம் பேசினோம். ''பாலியல் தொழில் செய்யும் பெண்களின் உரிமைக்காக போராட இந்தியாவில் 73 சமுதாய அமைப்புகள் உள்ளன. எல்லா அமைப்புகளிடமும் இதுபற்றி கலந்து பேசி,

சென்னையில் பாலியல் தொழில் செய்ய இடம் தேவை என்று கருதினால் அடுத்தகட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். வறுமைதான் பெண்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறது'' என்று சொன்னார்.

பாலியல் தொழிலாளி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. ''எனக்கு சொந்த ஊரு மதுரைக்கு அந்தப் பக்கம். வீட்டை எதிர்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன். அங்கிருந்து சென்னைக்கு வந்தோம். அவருக்கு சரியா வேலை இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலைமை. நாங்க குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு அக்காதான் என்னை இந்தத் தொழிலுக்குக் கூப்பிட்டாங்க. ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு. என் வீட்டுக்காரருக்கோ, எங்க குடும்பத்துக்கோ நான் இந்தத் தொழில் செய்யுறது தெரியாது. துணிக்கடைக்கு வேலைக்குப் போறதா சொல்லிட்டுக் காலையில கிளம்புவேன். நாங்க நாலு பேரு சேர்ந்து ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருக்கோம். அங்கே கஸ்டமர் வருவாங்க. அட்டன் பண்ணுவேன். சாய்ந்திரம் வீட்டுக்குக் கிளம்பிடுவேன். இந்தத் தொழிலுக்கு தனி இடம் கேட்பது எனக்கு சரியா தோணலை'' என்று சொல்கிறார்.

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் செயலாளர் ஹரிகரன், ''சென்னையில் 14 ஆயிரம் பாலியல்

தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுக்க 90 ஆயிரம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அரசின் கடமை. பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இவர்களுக்கென தனியாக இடம் ஒதுக்கினால் தேவைப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாது'' என்று சொல்கிறார்.

இந்தோ சீனா நட்புறவு கழகம் மற்றும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, ''அவர்கள் தனி இடம் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. மதுக்கடைகளை அரசு நடத்தும்போது பாலியல் தொழிலுக்கு இடம் ஒதுக்குவதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் குற்றங்கள் குறையும்'' என்கிறார்.

''எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விஷயம். ஆனாலும் விஷயத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறோம்'' என்கிறார்கள் காவல் துறை வட்டாரத்தில்.

பாலியல் தொழிலாளிகளுக்கு தனி இடம் அமைப்பதைவிட, அவர்களுக்கு மாற்று தொழில் அமைத்துக் கொடுப்பதே நல்ல அரசுக்கு அடையாளம்.

- எஸ்.மகேஷ்