என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

பெரும் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்புவதையும், அதை அவர்கள் வாய் கூசாமல் மறுப்பதையும், பின் அவர்கள் நாற்காலியை விட்டு நெம்பித் தள்ளப்படுவதையும் அடிக்கடி பார்க்கிறோம். தலையில் அடித்தபடி,  அடுத்த அசிங்கத்தை எதிர்நோக்கி எரிச்சலுடன் காத்திருக்கிறோம்.

பதவிக்காக கோமாளிக் கூத்துகளை அரங்கேற்றுவதில் 'புகழ்'பெற்ற கர்நாடகாவில் அடுத்த காட்சி. நித்தம் ஒரு குற்றச்சாட்டுக் கணையில் சிக்கியபடியே மூன்று ஆண்டு காலம் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று உச்சகட்ட அசிங்கத்துக்கு ஆளாகிவிட்டார். எதிர்க் கட்சிகள் மட்டும் இன்றி... ஆளுநரிடம் இருந்தும் சொந்தக் கட்சிக்குள் இருந்தும் புகார் மழை பொழிந்தும்கூட அவர் துளியும் அசரவில்லை. 'என் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால், நான் சாமியார் ஆகிவிடுகிறேன்’ என்றும் 'சாமி மீது சத்தியம் செய்கிறேன்!’ என்றும் அவர் அடித்த கூத்துகள் உச்சகட்ட ஜனநாயகக் கேவலம்.  

இறுதியாக, முறைகேடான சுரங்கத் தொழில் காரணமாக அரசுக்கு

தலையங்கம்

15 ஆயிரம் கோடிக்கும் மேலாக இழப்பு என்று 'லோக் ஆயுக்தா' அமைப்பு குற்றம் சுமத்திய பிறகே,எடியூரப்பா பதவி இறங்குவதற்கான சூழல் பிறந்தது. இவருடைய  குடும்பத்தினர் தொடர்புஉடைய ஓர் அறக்கட்டளைக்கு தனியார் நிறுவனம்

தலையங்கம்

10 கோடி நிதி அளித்த பின்னணி பற்றி கேள்வி கேட்ட 'லோக் ஆயுக்தா', எடியூரப்பா குடும்ப நிலம் ஒன்றை 15 மடங்கு அதிக விலை கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியது ஏன்? என்று எழுப்பிய கேள்வியின் வேகத்தை அவரால் தாங்க முடியவில்லை!  

'அவமானம் போதும்... பதவி விலகுங்கள்' அடிக்கடி இவரை அழைத்துப் பேசி முகத்தில் கரி பூசிக்கொண்ட பா.ஜ.க. தலைமைக்கு இப்போதாவது நிம்மதி பிறக்குமா என்றால், அதற்கும் வெடி வைத்தார்! 'எனக்குப் பதில் இவரை முதல்வர் ஆக்குங்கள்' என்று கட்சித் தலைமைக்கு 'கட்டளை' தொனியில் சிபாரிசு செய்தார். திருட்டுப் புகாரில் துரத்தப்படும் ஓர் ஊழியர், 'என் இடத்தில் இன்னாரை அமர்த்துங்கள்' என்று அடம் பிடிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தன் கோஷ்டிக்காரர் ஒருவரிடமே பதவி போனால், அடுத்தகட்ட விசாரணைகளை அமுக்கிப் போடலாம் என்பதன்றி, வேறு என்ன நாட்டு நலச் சிந்தனை இதில் இருக்க முடியும்?