Published:Updated:

சோனியா பிரதமர் ஆவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்:பி.ஏ.சங்மா

Vikatan Correspondent
சோனியா பிரதமர் ஆவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்:பி.ஏ.சங்மா
சோனியா பிரதமர் ஆவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்:பி.ஏ.சங்மா
சோனியா பிரதமர் ஆவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்:பி.ஏ.சங்மா

புதுடெல்லி: சோனியா காந்தி பிரதமராக வருவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பி.ஏ. சங்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"சோனியா காந்தி பிரதமராவதை நான் ஏற்க மாட்டேன்.இன்றைக்கும் என்றைக்கும் என் கருத்து இதுதான்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராகவோ,ஜனாதியாகவோ வருவதை சாகும்வரை நான் ஏற்க மாட்டேன்.இதில் நான் தெளிவாகவே உள்ளேன்" என்றார்.

1999-ல் சோனியா காந்தி பிரதமராவதை எதிர்த்து சரத் பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ்  ஆரம்பித்தனர். அதே நேரத்தில், 2012 மே 22-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சங்மா, சோனியாவை எதிர்த்தது ஒரு முடிந்துபோன சகாப்தம்; மறந்துபோன விவகாரம்.இது குறித்து சோனியாவையே நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டிருக்கிறேன் என்றார்.

ஆனால்,இப்போது சோனியாவுக்கு எதிரான தனது பழைய நிலைப்பாட்டை சங்மா மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.அப்துல் கலாம் தனது புதிய புத்தகத்தில், சோனியா பிரதமராக வர ஆசைப்பட்டிருந்தால்,அவரை பிரதமராக நியமிப்பதைத் தவிர வேறு வழி எனக்கு இருந்திருக்காது என்று 2004-ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.இது பற்றி பல்வேறு தலைவர்கள் கருத்துக் கூறி வரும் நிலையில், சங்மா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.