Published:Updated:

ரஜினியின் எதிர்காலம் ஆண்டவன் கையிலா... அருணாச்சலம் க்ளைமாக்ஸிலா? #VikatanFun

ரஜினியின் எதிர்காலம் ஆண்டவன் கையிலா... அருணாச்சலம் க்ளைமாக்ஸிலா? #VikatanFun
ரஜினியின் எதிர்காலம் ஆண்டவன் கையிலா... அருணாச்சலம் க்ளைமாக்ஸிலா? #VikatanFun

ரஜினி ஒருவேளை தீவிர அரசியலில் குதித்துவிட்டால் எப்படி எல்லாம் அரசியலில் சமாளிக்கலாம்னு சில ஃப்ரீ ஐடியாஸ்... 

* திடீர்னு  பீச் ல உட்கார்ந்து தியானம் பண்ணுறவங்க, பிரியாணிக்கடையில தியானம் பண்றவங்களை எல்லாம் அரசியலுக்கு வொர்த்னு நம்புறீங்க. அவங்க பின்னாடிலாம் தலைவா...ன்னு கத்திக்கிட்டு சுத்துறீங்க. அப்படிப்பாத்தா நான்லாம் ஆண்டாண்டு காலமா பரம்பரை பரம்பரையா தியானம் பண்ணிக்கிட்டு இருக்குறேன். இந்நேரம் என்னோட தியான எக்ஸ்பீரியன்ஸுக்கு பிரதமராகவே ரெண்டு மூணு தடவை நீங்க ஆக்கியிருக்கணும் மக்களே. ஆகவே இந்த தடவையாவது பாத்து பண்ணுங்க என மக்களிடம் எடுத்துரைக்கலாம். #தியானமே உன்னை பிரதமராக்கும் குமாரு 

* 'நான் அரசியலுக்கு வர்றதுலாம் ஆண்டவன் கையிலதான் இருக்குது'ன்னு அன்னைக்கு சொன்னதைதான் இன்னைக்கும் சொல்றேன். இன்னைக்கு சொல்றதைதான் என்னைக்கும் சொல்வேன். அரசியல் பத்தி 20 வருசமாக நான் மாத்தி ஏதும் பேசலையே. ஒரே மாதிரிதான் பேசுறேன். இன்னைக்கு ஒரு பேச்சும் நாளைக்கு ஒரு பேச்சும் பேசுற அரசியல்வாதிகள் இருக்குற ஊரில் என்னைய மாதிரி யாரு உண்மையா இருக்கா? ஆகவே, தமிழனாக இருந்தால் எனக்கே சப்போர்ட் பண்ணுங்கள் என புது ட்ராக்கில் போய் புல்டோசர் ஓட்டலாம். #ஆண்டவர் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்

* ஒருவேளை அரசியலுக்கு வந்து, பதவியும் ஜெயித்து சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேத்தவே இல்லைனாலும் ரஜினி அதிலிருந்து தப்பிக்க ஒரு 'வேற லெவல்' ப்ளானும் ரெடியா இருக்கு. புகார் அளிக்க வருபவர்களிடம் நான் என்னங்க பண்ணுறது, எல்லாம் அந்த ஆண்டவன் கையில இருக்குது. நான் என்ன செய்ய செய்யவேண்டும் என்பதை அவன்தானே முடிவு பண்ணணும். அவர் என்கிட்ட இன்னும் ஏதும் சொல்லலை, அதனால நான் பண்ணலை என புதுவிதமாக கொளுத்திப்போட்டு விமர்சனத்திலிருந்து எஸ்கேப் ஆகலாம். #ஆண்டவர் சொல்லட்டும்னு காத்திருக்கோம்.

* மத்த கட்சிக்காரங்க எல்லாம் வாக்குறுதிகள்னு சிலதை சொல்வாங்க, ஆனா செய்யமாட்டாங்க. ஆட்சிக்கு வந்ததும் அநியாயம் செய்வாங்க ஆனா வெளியில சொல்லமாட்டாங்க. ஆனா நான் சொல்றதைத்தைத்தான் செய்வேன், செய்றதைத்தான் சொல்வேன்னு ரொம்ப சிரமப்படாமல் ஏற்கெனவே சினிமாவில் அவர் பேசுன சில பன்ச் டயலாக்குகளை எல்லாம் பட்டி, டிங்கரிங் பார்த்தே போறபோக்கில் பிரசாரமாக பேசி வைக்கலாம். #எச்சச்ச கச்சச்ச எச்சச்ச ரோல் ஆவுதே

* ஒருவேளை அம்புட்டு அலப்பறை பண்ணியும் தேர்தலில் தோற்றுவிட்டாலும்கூட  அதற்கும், ''நல்லவங்களுக்கு ஆண்டவன்  கஷ்டங்களை கொடுப்பான்; ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான்; ஆனா கைவிட்டுடுவான். ஆங்...''னு அவரது பழைய பன்சை வைத்தே பஞ்சர் ஒட்டி வண்டியை ஓட்டிச் சமாளிக்கலாம். #காருக்கு எதுக்கு அச்சாணி

* அதை எல்லாம் மீறி கட்சியையே கலைச்சுட்டாலும், ''அட இதென்ன பிரமாதம் இதைத்தான் நான் ஆல்ரெடி அருணாச்சலம் படத்துலேயே குறியீடா காட்டிருக்கேனே. பாக்கலையா நீங்க'' என கூலாக யூ-டியூப் லிங்குகளை அனுப்பி சமாளிஃபிகேசன் தியரிகளை சாரலாய்த்தூவி சமாளித்துக்கொள்ளலாம். ஹ்ம்ம்...  அப்புறம் என்ன?  'வந்துட்டேன்னு சொல்லு. திரும்பவும் அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு'னு சொல்வதற்கான அடுத்த ரீ-என்ட்ரிக்காக தன்னைத் தயார் செய்யலாம்! #போர்... ஆமாம் போர்