Published:Updated:

தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றி விட்டது.. : தமிழிசை சவுந்தரராஜன் பகீர்!

தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றி விட்டது.. : தமிழிசை சவுந்தரராஜன் பகீர்!
தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றி விட்டது.. : தமிழிசை சவுந்தரராஜன் பகீர்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. பன்னீர்செல்வம், சசிகலா, தீபா என்று தனித்தனியாக செயல்பட்டனர். சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் கைது செய்யப்பட்டப் பிறகு அ.தி.மு.க-வை இணைப்பதற்கான, முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.


குறிப்பாக, தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் அசாதாரண சூழலுக்கு பி.ஜே.பிதான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பி.ஜே.பி தலைவர்களும், தமிழகத்தில் அ.தி.மு.க அழிந்து விட்டது என்று கூறிவந்தனர். 

இந்நிலையில்,  தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம், "தமிழ்நாட்டில் மணல், டாஸ்மாக்கில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. இங்கு பி.ஜே.பி-யை வலுப்படுத்த, மாவட்டம் தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பி.ஜே.பி வேகமாக ஓடி காலூன்றத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆவியைக் கண்டு பயப்படுவது போல், காவியைக் கண்டு பயப்படுகின்றனர்" என்று கூறினார்.

இந்நிலையில், பி.ஜே.பி எம்.பி இல.கணேசனும், "தமிழகத்தில், பி.ஜே.பி காலூன்றி, வேகமாக ஓடத் துவங்கி விட்டது" என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, சென்னை விமானநிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "தமிழகத்தில் பி.ஜே.பி ஒருபோதும் காலூன்ற முடியாது. தனியாக வந்தாலும், யாருடன் கூட்டணி அமைத்தாலும், அது சாத்தியமாகாது" என்று கூறியுள்ளார்.