Published:Updated:

இந்தியாவின் மிக நீளமான பாலத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் மிக நீளமான பாலத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
இந்தியாவின் மிக நீளமான பாலத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் மிக நீளமான பாலத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அஸ்ஸாமில் ஆட்சியமைத்துள்ள ஆளும் பா.ஜ.க-வின் சார்பில், இன்று பிரதமர் மோடி திறந்துவைத்த பாலம், சுமார் 950 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 60 டன் எடையுள்ள ராணுவ பீரங்கிகளையும் தாங்கும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டுசெல்லும் நோக்கில் இது கட்டப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்து, இன்று திறப்பு விழா கண்டுள்ளது.

அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேச மாநிலங்களின் இடையேயான போக்குவரத்து 13 மணி நேரமாக இருந்தது. ஆனால் இந்தப் பாலத்தின்மூலம் தற்போது, 4 மணி நேரமாகக் குறைந்துள்ளது. இந்தப் பாலம், இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போக்குவரத்துக்குப் பயனுள்ளதாக அமையும். மேலும், நாட்டின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், பாதுகாப்புரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம்பெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு