Published:Updated:

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

Published:Updated:

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர் : பகுதி-3

குத்தறிவுக்கு பல்வேறு பக்கங்கள் உண்டு என்பதை நேரு உணர்ந்து இருந்தார். மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பகுத்தறிவு சூழ்ந்து இருக்கிறது என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும், தன் வாழ்நாள் முழுக்க பகுத்தறிவையே நேரு சார்ந்திருந்தார். பகுத்தறிவின் போதாமைகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டார். பகுத்தறிவைக் கொண்டு இயங்கும் அறிவியல், அரசியல், சமூக செயல்பாடுகள் எப்படி அறத்தோடு இயங்குவது என்கிற புரிதல் இல்லாமல் செயல்படும்போது அவற்றின் அடித்தளம் அசைகின்றன.

அறிவியல் தேடலின் எல்லைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நிஜத்தில் அறிவியலுக்கு எல்லைகள் இருந்தன. அறிவியலுக்கு "எது இறுதி நோக்கம் என்பது குறித்த புரிதல் இல்லை. அதற்கு எது வாழ்க்கையின் அவசரமான நோக்கம் என்கிற புரிதல்கூட இல்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அறிவியல் நமக்கு சொல்லித்தரவே இல்லை. அறிவியலை முன்னேற அனுமதித்தால் அதன் அசுரப்பாய்ச்சலுக்கு முடிவே இல்லை. ஆனால், அறிவியல் கூர்மையான ஆய்வுப்பார்வை எல்லா சமயங்களிலும் உதவாது. அந்த ஆய்வுப்பார்வை பலதரப்பட்ட மானுட அனுபவங்கள் அனைத்துக்கும் பொருந்தாது. அறிவியலால் நம்மைச் சூழ்ந்திருக்கும் அளக்க முடியாத பெருங்கடல்களை கடந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பகுத்தறிவு என நாம் அழைக்கும் அறிவால் பயணிக்க முடியாது" என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 452). அறிவியல் "நீதிநெறி சார்ந்த ஒழுங்கு, அறம் சார்ந்த பார்வையை கொண்டிருக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கும் என்றால் அதிகார குவிப்பு நிகழும். மேலும், பிறரை அடக்கி ஆள வெறி கொண்டிருக்கும் மோசமான, சுயநலமிக்க மனிதர்களின் கையில் அறிவியல் மிக ஆபத்தான அழிவுக் கருவியாக மாறும். இதனால், அதன் மகத்தான சாதனைகள் மண்ணோடு, மண்ணாக போகும்" என்று நேரு சரியான பார்வையைக் கொண்டிருந்தார்.(கண்டடைந்த இந்தியா பக்கம்:16).

அரசியல் பகுத்தறிவுக்கும், அதிகாரக் கனவுகளை அடைவதற்கான தேடலுக்கும் இடையே மூழ்கிப்போகும் வாழ்க்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதிகாரக் கனவுகளை நோக்கிய இந்தப் பயணம் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடியது. இந்தத் தேடலில் அது ஊழல்மயமாகும் ஆபத்துகள் அதிகம். 1937-ல் 'சாணக்கியா' என்கிற புனைபெயரில் 'மாடர்ன் ரீவியூ' இதழில் ஒரு கட்டுரையை நேரு எழுதினார். மக்களின் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த நேரு, தன்னுடைய அரசியல் கனவுகளை, தானே கடுமையாக விமர்சித்துக் கொண்ட கட்டுரை அது. அக்கட்டுரையை வேறு யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும், தனக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும், நேரு எழுதிக்கொண்ட கட்டுரை எனக் கருத இடமுண்டு. எனினும், அரசியல் வாழ்க்கையில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, தன்னைத்தானே சீர்தூக்கிப் பார்த்து விமர்சித்துக் கொள்ளும் அரிய தருணம் அது.

'சாணக்கியா' மக்கள் திரளின் பேராதரவை அள்ள முடிகிற நேருவின் திறன், அவரின் அரசியல் சாதுர்யம் குறித்து எழுதினார். அதற்குப் பிறகு, நேருவுக்கு ஒரு தெளிவான இலக்கு, உற்சாகம், பெருமிதம், நிர்வாகத்திறன், கடுமை எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பேரன்பு ஆகியவை வாய்த்திருக்கின்றன. மேலும், அவருக்கு மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பண்பு இல்லை. பலவீனமானவர்களை, செயல்திறன் குறைந்தவர்களைக் கேவலமாகப் பார்க்கும் குணமும் நேருவுக்கு உள்ளது. இவை அவரை சர்வாதிகாரியாகக் காலப்போக்கில் மாற்றிவிடக்கூடும். எப்படியேனும் காரியத்தை முடித்து விடவேண்டும் என்று வேட்கைகொண்டு அலைகிறார் நேரு. தனக்கு பிடிக்காதவற்றைத் துடைத்து, அழித்துவிட்டுப் புதியவற்றைக் கட்டியெழுப்பும் வேட்கை மிகுந்திருக்கும் நபராக நேரு திகழ்கிறார். அவரால் அன்னநடை போட்டபடி நகரும் ஜனநாயகத்தின்   நடைமுறைகளை நீண்ட காலத்துக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை...நேரு தன்னை சீஸரைப் போன்று  சர்வவல்லமை மிக்க சர்வாதிகாரியாகக் கனவு காண்கிறார் என்று சந்தேகிக்கலாம்.

நேரு தனக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருப்பதையும், அதிகாரத்தின் கருவிகளை, அரசியல் பகுத்தறிவைக் கையாளும் திறன் தனக்கு இருப்பதையும் உணர்ந்திருந்தார். மேலே குறிப்பிட்ட கட்டுரையிலும், பிரதமரான பின்னும் அதிகார வேட்கையின் ஆபத்துகள் பற்றி, தான் கொண்டிருக்கும் அச்சத்தையும், அரசியல் செயல்படும் விதங்களைக் குறித்து, தான் கொண்டிருக்கும் வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அது 'நான் அற உணர்வு மிக்கவன்' என்று காட்டிக்கொள்ளும் ஒரு நாடகம் அல்ல; அவை அரசியலை வாழ்க்கையாகக் கொண்டதால் நேருவுக்கு ஏற்பட்ட அறம்சார்ந்த பதற்றத்தின் வெளிப்பாடு. அரசியலில் தனிப்பட்ட நபராக, கட்சியில், மாநில அளவில் தான் பெறுகிற வெற்றிகள் தலைக்கேறும் ஆபத்தை நேரு உணர்ந்திருந்தார். கண்டடைந்த இந்தியா நூலில் நேரு, "இன்றைக்குப் பொருளாதார, அரசியல் உலகில் அதிகாரத்திற்காக அலைகிறார்கள். அதிகாரம் கிட்டியதும் அறம் என்பது அரிதாகி விடுகிறது... அதிகாரத்திற்கு என்று போதாமைகள் உண்டு. அதிகாரம் தன்னைத் தானே பின்னோக்கி இழுத்துக் கொள்கிறது", என்று எழுதினார் (பக்கம் 495). ஒரு அரசியல்வாதியின் உண்மையான வெற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமில்லை; அதை எப்படி அறவழியில் செலுத்துவது என்பதில்தான் அது அடங்கி இருக்கிறது. அதை சாதிக்காவிட்டால் அரசியல் வெற்றி அறத்தின் தோல்வியாகி விடும்.

நேருவுக்குப் பகுத்தறிவின் போதாமைகள் புரிந்திருந்தாலும், அவர் அதைக் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக, நேரு பகுத்தறிவின் எல்லைகளை விரிவுபடுத்தினார். அறம் சார்ந்த பிரச்னைகளை அவர் பகுத்தறிவைக் கொண்டு அணுகினார். பகுத்தறிவைப் பயன்படுத்தும் அணுகுமுறையை அவர், 'அறிவின் செயல்பாடுகள்' எழுத்துகளின் மூலம் நடைமுறையில் அமல்படுத்தினார்.

அக வாழ்க்கையில் நேருவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, பாதுகாப்பு தேவைப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையின் பத்தாண்டுகளை சிறைச்சாலைகளில் செலவிட்ட ஒருவருக்கு மனதளவிலும், உளவியல் ரீதியாகவும் ஏதோ ஒரு நம்பிக்கை நிச்சயம் தேவைப்படும். 1930-களில்டேராடூன், அல்மோரா சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த நேரு, மனச்சிதைவுக்கு அடிக்கடி ஆளானார். அவருடைய மனைவி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரும் நோயுற்று இருந்தார். துயரம் மிகுந்த அந்தக் காலங்களில், நேருவின் மனைவி மதப்பற்று மிக்கவராக மாறினார். நேருவின் மகள் வேறெங்கோ படித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த காலங்களில் நேருவுக்கு உற்ற பாதுகாவலனாக இருந்த அப்பா மோதிலால் நேரு, உயிரோடு இல்லை. உண்ணாவிரதம், சட்டத்தை ரத்து செய்தது என்று இயங்கிக்கொண்டு இருந்த காந்தியின் செயல்முறைகள் அவருக்குக் கடும் கோபத்தைக் கிளப்பின. காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் நேருவுக்கு இருந்தன. அவருடைய தனிமையும், எதுவும் செய்ய முடியாத வெம்மையும் முழுமையடைந்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. தன்னுடைய நாட்குறிப்பில் நேரு, "நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தனிமையாக உணர்கிறேன். என் அப்பா, ஆசை ஆசையாகக் கட்டிய வீடு இடிந்துக் கொண்டிருக்கிறது... இதுவரை என்னைத் தாங்கிக் கொண்டிருந்த தோள்களை இழந்து கொண்டே இருக்கிறேன்" என எழுதினார்.

1930-களில் அகமதுநகர் கோட்டையில் வெகுகாலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிட்டபோதும் நேரு நம்பிக்கை இழந்தவராக உணர்ந்தார். ஐரோப்பாவில் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. விடுதலைப் போராட்டம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை புதைகுழியில் சிக்கிக்கொண்டதாகத் தோன்றியது. அவரின் குடும்ப வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருந்தது. நேருவால் ஆற்றாமையை மறைக்க முடியவில்லை. "இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என உறுதியாக தெரியும் போது, சந்தேகம் குடிபுகுந்து விடுகிறது" என எழுதினார் (கண்டடைந்த இந்தியா பக்கம்:7). இப்படிப்பட்ட அகவாழ்க்கை, உளவியல் சிக்கல்கள் மிகுந்த காலங்களிலும் நேரு மத நம்பிக்கை கொண்டவராக மாறவில்லை. "நான் உனக்குத் தலைவணங்க மாட்டேன்" என்று மதத்தின் முன் அடிபணிய மறுத்து, நேரு நிமிர்ந்து நின்றார். வாழ்வின் துயரங்களை மறக்க எழுத்துப்பணியில் அவர்தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1930-களில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில், சுயசரிதையை எழுதினார். 1940-களில் கண்டடைந்த இந்தியா நூலை எழுதி முடித்தார்.

நேரு மனதளவில் திக்கற்று நிற்கையில், சந்தேகம் சூழ்கையில், குழப்பங்கள் திகைக்க வைக்கையில் தன்னுடைய குழப்பங்களைத் தெளிவாக வெளிப்படுத்தினார். அதன்மூலம் அவர் தெளிவடைந்தார். பல வருடங்கள் நேரு குழப்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளக் கடிதங்கள், கட்டுரைகள், நாட்குறிப்புகளைத் தொடர்ந்து எழுதினார். பிற்காலத்தில், அவருக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் போனபோது அவர் மேடைகளில் பேசுவது, முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நேருவும், காந்தியும் பக்கம் பக்கமாகப் பேசினார்கள், எழுதினார்கள். இதற்கு என்ன காரணம் என்று தேடினால் தங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து விளக்கவும், அந்தக் கருத்துக்களின் பின்னுள்ள தர்க்கத்தை மக்களுக்குப் புலப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முயன்றார்கள் என்று புரியும்.

நேருவின் எழுத்துகளும், பேச்சுகளும் அவர் தொடர்ந்து அகவாழ்விலும், பொதுவாழ்விலும் பகுத்தறிவோடு இயங்கியதற்கான சாட்சியங்கள். இந்தியாவின் பொதுவாழ்க்கையில், பகுத்தறிவை தாகூர், நேரு, காந்தி என்கிற மூன்று ஆளுமைகளும் கட்டமைத்தார்கள். இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கடித எழுத்தாளர்கள் என்பது ஒன்றும் எதேச்சையானது இல்லை. இவர்கள் தொடர்ந்து உரையாடலிலும், விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். தாகூர், காந்தி ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு நேருவோடு உரையாடி அவரின் மையமான நம்பிக்கைகளுக்குச் சவால் விடக்கூடிய சிறந்த ஆளுமைகள், அறிவுஜீவிகள் இல்லாமல் போனது சோகமான ஒன்று.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்தி பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய 'நேருவின் நம்பிக்கை' எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.