Published:Updated:

’மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் தாக்கு

அஸ்வினி.சி
’மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் தாக்கு
’மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் தாக்கு

இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

’மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் தாக்கு


 

கால்நடை வர்த்தகத்திற்கான விதிமுறையில் நேற்று மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது. மேலும்  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் ‘நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஒரு “அறிவிக்கையை” மத்திய அரசே வெளியிடுவது “நல்லாட்சியின்” இலக்கணம் அல்ல என்பதை மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க. உணர வேண்டும்’ என்று குறிப்பிட்டுருந்தார்.

 இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ‘இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பால் சிறுபான்மையினர், விவசாயிகள் பாதிக்கப்படுவர்’ என்றார்.