Published:Updated:

சர்வதேச அளவில் மோடி முதலிடம்..!

ராகினி ஆத்ம வெண்டி மு.
சர்வதேச அளவில் மோடி முதலிடம்..!
சர்வதேச அளவில் மோடி முதலிடம்..!

சர்வதேச அளவில் ஃபேஸ்புக்கில் அதிக பேர் ஃபாலோ செய்யும் தலைவராக உள்ளார் பிரதமர் மோடி. சுமார் 4 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக்கில் மோடியை பின் தொடர்கிறார்கள்.


ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி உலகளவில் உள்ள முக்கிய தலைவர்களில் பிரதமர் மோடியைத் தான் அதிகம் பேர் பின் தொடர்கின்றனர். இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பினை சுமார் 2 கோடிக்கு அதிகாமானோரே பின்தொடர்கின்றனர். 


நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற போது ஃபேஸ்புக்கில் அவரை பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி தான். ஆனால், தற்போது மோடியை 4,13,86,406 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் ஃபேஸ்புக்கில் சிறப்பாகச் செயல்பட்டது மட்டும் தான் இந்தியப் பிரதமர் மோடியின் சாதனையா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களைப் பதிந்து வருகின்றனர்.


அடுத்ததாக, ஃபேஸ்புக் பக்கங்களில் தூய்மை இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ ஆகிய பக்கங்களும் அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது சமூக வலைதள ஆய்வு ஒன்று கூறுகிறது.