Published:Updated:

சோனியாவுக்கு ‘நோ’...மோடிக்கு ‘யெஸ்’..: நிதிஷ் குமாரின் புது அரசியல்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
சோனியாவுக்கு ‘நோ’...மோடிக்கு ‘யெஸ்’..: நிதிஷ் குமாரின் புது அரசியல்!
சோனியாவுக்கு ‘நோ’...மோடிக்கு ‘யெஸ்’..: நிதிஷ் குமாரின் புது அரசியல்!

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் புதுவித அரசியல் நடவடிக்கைகள் தேசிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.


வருகிற ஜனாதிபதி தேர்தலுக்காக ஆளுங்கட்சியை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து முடிவு செய்தனர். இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் அனைத்து எதிர்கட்சிகளும் மதிய விருந்துக்கு ஒன்றிணைந்தனர். இந்த விருந்துக்கு நிதிஷ் குமாருக்கு சோனியா விடுத்த அழைப்பை ஏற்காமல், பிரதிநிதி ஒருவரை அனுப்பியவர், இன்று மோடி அழைப்பினை ஏற்று மதிய விருந்துக்கு செல்ல உள்ளார்.


ஒரே நாளில் நிதிஷ் குமாரின் இரு வேறு முடிவுகள் தேசிய அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென சோனியாவை முதலில் சந்தித்ததே நிதிஷ் தான் கூறப்படுகிறது. இந்நிலையில் சோனியாவின் அழைப்பை மறுத்து அடுத்த நாளே மோடியின் அழைப்பை ஏற்றுள்ளார் நிதிஷ்.


மொரிஷியஸ் பிரதமரை கவுரவிக்கும் வகையில் இன்று மோடி மதிய விருந்து அளிக்கிறார். அரசியல் சலசலப்புகளுக்கு நிதிஷ் பதிலளிக்கையில், ‘மொரிஷியஸ் பிரதமருக்கான விருந்தில் பங்கேற்கிறேன். மொரிஷியஸில் பீகாரைச் சேர்ந்தோரே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த உனர்வுபூர்வமான தொடர்பு இருப்பதால் மொரிஷியஸ் பிரதமரை சந்திப்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.