Published:Updated:

அமைச்சரவை மாற்றமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

குருபிரசாத்
அமைச்சரவை மாற்றமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்
அமைச்சரவை மாற்றமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

ஏற்காட்டில் 42-வது கோடை விழா மலர்கண்காட்சியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சமீபகாலமாக எம்.எல்.ஏ-க்கள், முதல்வரை தனித்தனியாக சந்தித்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது.

அமைச்சரவை மாற்றமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்


இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "83 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறது. அரசின் திட்டத்தை, எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டு தூர்வாருவது பாராட்டத்தக்கது. சேலம் மாவட்டத்தில் பாலம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்கும் திட்டம் இல்லை. எம்.எல்.ஏ-க்கள் தொகுதி பிரச்னைக்காகதான் சந்தித்தனர். எம்.எல்.ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை. அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. சட்டப்பேரவையில், சட்டப்படி ஜெயலலிதாவின் படத்தை திறப்போம். மாட்டிறைச்சிக்கு எதிரான தடை குறித்து முழுமையான அறிவிப்பு வந்த பின்னர் தான் கருத்து கூற முடியும்" என்று கூறினார்.