Published:Updated:

மோடி- நிதிஷ் குமார் சந்திப்பின் பின்னணி என்ன..?

ராகினி ஆத்ம வெண்டி மு.
மோடி- நிதிஷ் குமார் சந்திப்பின் பின்னணி என்ன..?
மோடி- நிதிஷ் குமார் சந்திப்பின் பின்னணி என்ன..?

இன்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நிதிஷ் குமார் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

வருகிற ஜனாதிபதி தேர்தலுக்காக ஆளுங்கட்சியை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முடிவு செய்தனர். இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மதிய விருந்துக்கு ஒன்றிணைந்தனர். இந்த விருந்துக்கு நிதிஷ் குமாருக்கு சோனியா விடுத்த அழைப்பை ஏற்காமல், பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். ஆனால், இன்று மோடி அழைப்பினை ஏற்று மதிய விருந்துக்குச் சென்றார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு தான் தற்போதைய தேசிய அரசியல் அதிகம் விவாதிக்கப்படும் சம்பவம் ஆகும். இந்தச் சந்திப்பில் வருகிற குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும், ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘பிரதமர் மோடியிடம் கங்கை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக எடுத்துக்கூறினேன். கங்கை நதியை தூர்வாரமல் இருந்தால் மழை நேரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என எடுத்துரைத்தேன்’ என்றார்.