Published:Updated:

'மூன்றாண்டு ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம்' : மோடியை வாழ்த்திய எடப்பாடி!

குருபிரசாத்
'மூன்றாண்டு ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம்' : மோடியை வாழ்த்திய எடப்பாடி!
'மூன்றாண்டு ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம்' : மோடியை வாழ்த்திய எடப்பாடி!

மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி மாநில முதல்வர்கள், நாடு முழுவதும் சென்று மக்களிடம், பி.ஜே.பி ஆட்சியின் சாதனை குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இந்நிலையில், பி.ஜே.பி அரசின், மூன்று ஆண்டுகள் ஆட்சி நிறைவையொட்டி, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

'மூன்றாண்டு ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம்' : மோடியை வாழ்த்திய எடப்பாடி!

அதில், "பிரதமராக மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்கு, எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் இந்தியா பெரும் சாதனைகளை செய்து வருகிறது. உங்களது திறமையான செயல்பாட்டால், பல்வேறு துறைகளில் நாடு மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

தமிழக அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு, இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நீண்ட நாள்களுக்கு நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் இறைவன் உங்களுக்கு வழங்கவும், நாட்டிற்கும் மக்களுக்கும் நீங்கள் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பி.ஜே.பி மூன்றாண்டு ஆட்சி நிறைவையடுத்து, நேற்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.