Published:Updated:

‘எங்களை உளவு பார்க்கிறாங்க!’ - அலறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்

‘எங்களை உளவு பார்க்கிறாங்க!’ - அலறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்
‘எங்களை உளவு பார்க்கிறாங்க!’ - அலறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்

‘எங்களை உளவு பார்க்கிறாங்க!’ - அலறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்

மிழகத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 133 பேரில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியிலுள்ள எம்.எல்.ஏ-கள், எம்.பி-க்கள், மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் காட்டில் வைட்டமின் 'ப' கொட்டுகிறது. 

நாலு முதல் பத்து எம்.எல்.ஏ-க்கள் பேசி வைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார்கள். நேராகப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்கள். வெளியில் தொகுதிப் பிரச்னை பற்றி பேசுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் அமைச்சர் பதவி கேட்டு, பிளாக் மெயில் செய்கிறார்கள் என்கிற பேச்சு தலைமைச் செயலகத்தில் அடிபடுகிறது. இதன் எதிரொலியாக எம்.எல்.ஏ-க்களின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதாக மிரண்டு கிடக்கிறார்கள். 

எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் யார் அந்த உளவு ஆடு? என்பதுதான் இப்போதைய டாபிக்! 

முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், தமிழக அரசின் உளவுப் பிரிவு போலீஸார் டம்மியாக செயல்பட்டனர். முக்கியமான அசைன்மென்ட்கள் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் டிடெக்டிவ் நிறுவனத்திடம் கொடுத்து வந்ததாகப் பேச்சு உண்டு. குறிப்பாக, சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் முதலில் சென்றது டிடெக்டிவ் ஆட்கள்தான். பார்ப்பதற்கு மிடுக்கான போலீஸ் மாதிரி தெரிவார்கள். இவர்களுக்கு தரப்பட்ட ரெய்டு நடத்தும் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பியதும், அடுத்த நொடியே...நிஜ போலீஸ் உள்ளே நுழைவார்கள். அதேபோல், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதலே ஆட்கள் நியமிக்கப்பட்டனர். சர்வேலன்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் என்று இவர்களை அழைப்பார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் சரி...அவர் இறந்த பிறகும் சரி...அந்த டிடெக்டிவ் நிறுவனம் எது? அதன் தலைவர் யார்? எங்கே அதன் கன்ட்ரோல் ரூம் செயல்பட்டது என்கிற பல விவரங்கள் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்களாக பதவி ஏற்ற நேரத்தில், தனியார் உளவு வேலையை யார் செய்யப்போகிறார்கள் என்கிற பேச்சு எழுந்தது. ஆனால், செயல்படுத்தவில்லை. 

அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகிறார்... " இப்போதெல்லாம் நாங்கள் எங்கே போனாலும் யாரோ பின்தொடர்கிறார்கள். ஏதாவது விஷயம் போனில் பேசினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு யாரோ போய் தகவல் விசாரிக்கிறார்கள். போனில் 'பீப்..' ஒசை வந்தபடி இருக்கிறது. அதைக்கேட்டு சந்தேகம் அடைந்தோம். வேண்டுமென்றே நடக்காத ஒரு விஷயத்தை நானும் சக எம்.எல்.ஏ. ஒருவரும் போனில் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே, மறுநாள்...அந்த விஷயத்தைப் பற்றி நேரில் யாரோ போய் விசாரித்தார்களாம். இதிலிருந்தே புரியவில்லையா? யாரோ எங்களை ஃபாலோ செய்கிறார்கள் என்று. இந்நேரம், சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்றிருந்தால், முன்பு ஜெயலலிதா காலத்தில் இருந்த டிடெக்டிவ் நிறுவனம் மாதிரி வேறு ஏதாவது புதிய நிறுவனத்திடம் கொடுத்திருப்பார். தற்போது சிறைச்சாலையில் சசிகலா இருக்கிறார். ஆனாலும், அவர் கோஷ்டியின் முக்கிய பிரமுகருக்கு எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் செயல்பாடு பற்றிய நிறைய உளவுத் தகவல்கள் தேவைப்படுகிறது. எடப்பாடி கோஷ்டியினர், ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டியினர் என்ன செய்கிறார்கள்? எங்கே போகிறார்கள்? திரைமறைவில் என்ன செய்கிறார்கள்? என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள சென்னையின் முக்கியப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ஆபீஸ் நடத்துகிறார்களாம். டெலிபோன் உரையாடல்களை நவீன கருவிகள் உதவியுடன் கண்காணிக்கிறார்களாம். இந்த மொத்த டீமின் தகவல் சேகரிப்பு எங்கே செல்கிறது தெரியுமா? பெரியவர் என்று ஒரு பெயரைச் சொல்கிறார்கள். அவர் யார்? எங்கே இருக்கிறார்? எந்தவகையில் டிடெக்டிவ் வேலையை செய்து வருகிறார்? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். மொத்தத்தில், எங்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது. 24 மணி நேரமும் எங்களை உளவு பார்க்கிறாங்க. பெரியவரின் சகோதரர் முன்பு ஜெயலலிதாவின் பாதுகாப்பு பிரிவில் வேலை பார்த்தவர். அரசியல் வி.வி.ஐ.பி-க்களின் அந்தரங்க விஷயங்களை நன்றாக தெரிந்தவர். அவர் தலைமையில் டிடெக்டிவ் வேலையை ஒரு டீம் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முழுத்தகவல் வந்ததும் சொல்கிறோம்" என்றனர். 

அவரிடம் நாம், "இந்த வேலையைத்தானே தமிழக உளவுப்பிரிவு போலீஸார் செய்கிறார்கள்?" என்றதற்கு, " பவரில் இருப்பவர்கள் வழக்கமான போலீஸை எப்படி நம்புவார்கள்? ரகசியம் லீக் ஆகிவிடும் அல்லவா? அதனால்தான், சிலரை சர்வேலன்ஸ் செய்வது? பின்தொடருவது போன்ற சென்சிட்டிவான விஷயங்களைச் செய்ய தனியார் டிடெக்டிவ் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழக உளவுப்பிரிவு போலீஸார் அவர்களின் ரெகுலரான பணிகளை மட்டும் செய்து வருகிறார்கள். சீக்ரெட் விஷயங்களை டிடெக்டிவ் ஆட்கள்தான் செய்து வருகிறார்கள்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு