Published:Updated:

கருணாநிதிக்கு சோனியா காந்தி புகழாரம்!

கருணாநிதிக்கு சோனியா காந்தி புகழாரம்!
கருணாநிதிக்கு சோனியா காந்தி புகழாரம்!

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, சட்டப்பேரவை வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா சென்னையில் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பிரனாயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் லாலு பிரசாத், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

'சென்னை ராயப்பேட்டையில் நடக்கவுள்ள பிரமாண்ட விழாவில், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதால், லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறிவிட்டார்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "பத்திரிகையாளர், கதையாசிரியர், நாவலாசிரியராகவும் சிறந்து விளங்குபவர் கருணாநிதி. அவர், நீ்ண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.