Published:Updated:

கலைஞர் கருணாநிதி வைர விழா சிறப்புப் பகிர்வுகள்! முழு தொகுப்பு #HBDKalaignar94

கலைஞர் கருணாநிதி வைர விழா சிறப்புப் பகிர்வுகள்! முழு தொகுப்பு  #HBDKalaignar94
கலைஞர் கருணாநிதி வைர விழா சிறப்புப் பகிர்வுகள்! முழு தொகுப்பு #HBDKalaignar94

தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவினை முன்னிட்டு,  கருணாநிதி பற்றி விகடன் தளத்தில் வெளிவந்த சிறப்பு கட்டுரைகளின் தொகுப்பு இங்கே..!

Photo Albums

#கருணாநிதி60 : சட்டமன்ற நகைச்சுவைகள்!

ஒருமுறை சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர்,  ”திருச்செந்தூர் முருகனின் வேலை காணவில்லை என்று நடைப் பயணமாக திருச்செந்தூர் கொவிலுக்குச் சென்றார். அவரைப் பார்க்க விரும்பாத முருகன் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்துவிட்டார்” என்றார். அதற்கு கலைஞர் சொன்ன ’நச்’ பதில் சட்டமன்றத்தை சிரிப்பொலியில் ஆழ்த்தியது. அது என்ன தெரியுமா? பார்க்க

கிருபானந்த வாரியார் முதல் குயின் எலிசபெத் வரை..! - கருணாநிதியை சந்தித்த 70 பிரபலங்கள்!

ஏ.பி.ஜே அப்துல்கலாம், சுப்பிரமணியன் சுவாமி, ஜக்கி சத்குரு வாசுதேவ் போன்ற பல பிரபலங்கள் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. ஜெயலலிதாவும் கருணாநிதியும் சட்டமன்றத்தில் எதிரெதிரில் அமர்ந்திருக்கும் காண்பதற்கரிய காட்சிக்கு இங்கே க்ளிக் செய்யவும்

வைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்!

’தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்பொதும் தன் மக்களின் முகம் சுண்டக்கூடாது என்பதில் குறியாக இருப்பதுதான் தாய்க்குணம்’. கருணாநிதியின் இந்த 25 பொன்மொழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பார்க்க

சிறப்பு கட்டுரைகள்  

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?

1944 இல் திருச்சி வானொலி நிலையத்துக்கு தன்னுடைய நாடகம் ஒன்றை அனுப்பி வைத்தார். ’இதனை ஒலிபரப்ப முடியாது’ என்று வானொலி நிலையத்தால் திருப்பி அனுப்பி பின்னாளில் புகழ்பெற்ற திரைப்படமாக வந்த நாடகம் என்ன தெரியுமா? கருணாநிதி பற்றிய  சுவையான 10 விஷயங்கள் இங்கே! படிக்க 

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட கருணாநிதி இப்போது பேச முடியாத சூழல். நீண்ட நாள் சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் பேசிய அந்த சம்பவம் அப்படியே இங்கே..!

கருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு!

அண்ணா மறைந்தபோது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வுக்குள் கருணாநிதிக்கு ஆதரவான லாபியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆர் நினைத்ததைச் செய்து முடித்தார். எம்.ஜி.ஆரின் ராஜதந்திரத்தின் படி சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தலில் கருணாநிதியே வெற்றி பெற்றார். இப்படி இருந்தவர்கள் எப்படிப்பிரிந்தார்கள்? இதைப் படியுங்கள்..!

திருக்குவளை முத்துவேலர் தமிழக முதல்வர் கருணாநிதி ஆன கதை! #3MinsRead

கல்லக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாகப் பங்கேற்றார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. சரி.. கருணாநிதியின் பெயருக்குப் பின்னால் கலைஞர் என்ற பெயரும் நிலைக்க காரணமாய் இருந்தவர் யார் தெரியுமா? படிக்க

பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. சரி.. கருணாநிதி - தயாளு அம்மாள் திருமணப் பத்திரிகையில் தான் எந்த வேலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? பல்கலைஞர் தொடரின் முதல் அத்தியாயத்தை படித்துப் பாருங்களேன்.