Published:Updated:

முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தி!

முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தி!
முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தி!

முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுல் காந்தி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்தில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, அவரது 94-வது பிறந்தநாளான இன்று தி.மு.க.வினரால் வைர விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய அளவில் முன்னணி அரசியல் தலைவர்களும் சென்னை வந்துள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அப்படி வந்த அவர் முதன்முறையாக ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியிலிருக்கும் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதற்கு முன்னரும் ராகுல் காந்தி பலமுறை சென்னை வந்துள்ளார் என்றபோதும் இப்போதுதான் அவர் முதன்முதலாக ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்போது, ஸ்டாலினின் பேரன் இன்பா மற்றும் பேத்திகளுடன் செல்லமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதை ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்டாலின்
 

அடுத்த கட்டுரைக்கு