Published:Updated:

கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?

கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?
கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?

கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?

கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?

ஒருங்கிணைந்த தஞ்சையின் திருவாரூர்- திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் நாள், இன்றைய கலைஞர் அன்றைய கருணாநிதியாகப் பிறந்தார். பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகம். பிறப்பால் தட்சணாமூர்த்தி, தமிழ்மீது கொண்ட அளப்பறிய காதலால் தன்னுடைய பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டவர் கருணாநிதி. முற்போக்கு கொள்கையை கடைபிடிப்பதில் முரட்டுத்தனம், உறுதி, பிடிவாதம் கொண்டிருந்த கருணாநிதிக்கு அதே எண்ணத்தோடு பயணித்த திருவாரூர் இளைஞர்கள் நண்பர்களாக அமைந்தனர். அவர்களில் கலைஞர் மட்டுமே வயதில் மிகவும் இளையவர். வீட்டில் கைச்செலவுக்கு கிடைத்த பணத்தையும் எண்ணங்களை வடிக்கும் 'கையெழுத்து பிரதி' யாக கொண்டுவர பயன்படுத்திக் கொண்டார். முற்போக்குச் சிந்தனையுடன் எழுதக்கூடியவர்களை அதில் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். ஆங்கிலேயர் பிடியிலிருந்து நாட்டை மீட்க சுதந்திரப் போராட்டம் போய்க் கொண்டிருந்த கால கட்டம் அது... இருநூறு ஆண்டுகளாக இந்தியர்களின் முதுகில் பயணம் செய்த ஆங்கிலேயர் காலத்தின் இறுதிக் காலங்களில் உருவான நீதிக்கட்சிதான் கருணாநிதிக்கு தாய் வீடு. நீதிக் கட்சியில் இருந்த அழகிரிசாமியின் மேடைப்பேச்சு கருணாநிதியை பெரிதும் ஈர்த்தது. கட்சியின் கொள்கையோ கருணாநிதியை அப்படியே கட்டிப் போட்டது. நீதிக்கட்சியின் தாக்கத்தால், ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்றபெயரில் ஒரு அமைப்பை  இதன்பின்னர்தான் கருணாநிதி தொடங்கினார்.விதவை மறுமணம், ஜமீன் முறை ஒழிப்பு, மதவெறி, தீண்டாமை, விளிம்புநிலை மக்கள் ஆலயத்துக்குள் நுழைய அனுமதி, போலித்தனமான பக்தி, சுயமரியாதை மீட்டெடுப்பு போன்றவைகள் கருணாநிதியின் இயல்பில் அமைந்தது. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கொள்கையாகவும் இது அமைந்து போனது. அதுவே அவர் நடத்திய கையெழுத்துப் பிரதியிலும் வெளிப்பட்டது. தலையங்கம் தீட்டவும், தன் கருத்தை உரத்துச் சொல்லவும் தன்னுடைய பதினெட்டாவது வயதில் (1942) முரசொலி என்ற அச்சுப்பிரதியை கருணாநிதி தொடங்கினார். தொடக்கத்தில் வாரத்தில் ஒரு நாளாக வந்த முரசொலி, பின்னர் நாளிதழாக மாறியது. முரசொலியின் 'அடையாளம்' இதுதான் என்பது போல், ஜல்லிக்கட்டுக் காளையை இளைஞன் ஒருவன் அடக்குவது போல் அதில் போட்டு, அதன் கீழேதான் முரசொலி என்ற பெயர் வரும்படி செய்தார்.

கருணாநிதி உண்டியல் வைத்தது ஏன் தெரியுமா ?


பெருமுதலாளிகளின் கைகளில் அச்சு ஊடகம் இருந்த கால கட்டத்தில் எந்தவொரு துணையும் இல்லாமல், தனி மனிதனாக கருணாநிதி உருவாக்கிய ஏடு, முரசொலி. முற்போக்கு கருத்துகளை கொண்டிருந்த பலரும் முரசொலியில் கட்டுரைகள் எழுத வாய்ப்பு கேட்க ஆரம்பித்தனர். வாரத்தில் ஒருநாள் முரசொலியைக் கொண்டு வரவே பெரும் பொருள் இழப்பை சந்தித்த கருணாநிதி, முரசொலிக்கு பெருகிய ஆதரவைக் கண்டு அதை நாளேடாக்க துணிந்து முடிவெடுத்தார். 'முரசொலிக்கு எழுதுகிறவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்' என்று சொல்லாமல் சொல்வது போல் முரசொலி அலுவலகத்தில் ஒரு உண்டியலை வைத்தார். கருத்துகளை அச்சு வடிவில் உரத்துச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தவர்கள், கருணாநிதி வைத்த உண்டியலை மனப் பூர்வமாக வரவேற்றனர். உண்டியல் நிரம்பியது, முரசொலி யும் தடையின்றி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது. கருணாநிதி முரசொலிக்காக வைத்த உண்டியலின் இன்னொரு வடிவம்தான் பொதுக் கூட்டங்களில் கட்சி நிதிக்காக 'துண்டேந்தி' வரும் தொண்டர்கள்... கலைஞர், முரசொலிக்காக வைத்த உண்டியல், முரசொலி வளர்ச்சிக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. பிற்காலத்தில் பிறந்த நாள் உண்டியலாக அது மாற்றம் பெற்றது. அந்த உண்டியலில் பணத்தைப் போட ஒருநாளும் தொண்டர்கள் தயங்கியது இல்லை, என்பதை கருணாநிதியின் பிறந்தநாள் விழாவின்போது காணலாம். "அத்தனை உண்டியல் பணமும் கட்சிக்கான சொந்த கட்டடங்களாக மாவட்டந்தோறும் மாறியிருக்கிறது... எந்தக் கட்சிக்கு இப்படி மாவட்டங்களில் கட்டடங்கள் இருக்கிறது சொல்லுங்களேன்" என்கின்றனர் விரல்நுனியில் புள்ளி விபரம் கொடுக்கும் கருணாநிதியின் உடன்பிறப்புகள். முரசொலியின் ஆசிரியர்- வெளியீட்டாளர் என்ற தகுதியைத் தாண்டி, முரசொலியில் கருணாநிதி தீட்டிய கட்டுரைகள் பரவலாக கவனிக்கப்பட்டன. குறிப்பிட்ட வட்டம் என்றில்லாமல், பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டன. பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து கருணாநிதி போட்ட நாடகங்கள், அதில் தெறித்து விழுந்த வசனங்கள், அவரை கோடம்பாக்கத்துக்குள் தானாகவே கொண்டு போய் விட்டது. 
 

அடுத்த கட்டுரைக்கு