Published:Updated:

தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது!
தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது!
தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை, 14ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை பொறுப்புச் செயலாளர் பூபதி, இன்று வெளியிட்டுள்ளார்.

மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், அதே மாதம் 14ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க, சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், வரும் 14ஆம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவை பொறுப்புச் செயலாளர் பூபதி, இன்று அறிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என்று அறிவித்துள்ள அவர், மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், 30 முதல் 35 நாள்கள் வரை நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில், ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்படும் என்றும் தெரிகிறது.