Published:Updated:

திராவிடக் கட்சிகள்தான் பா.ம.க-வை பயன்படுத்திக் கொண்டன!

கவின் மலர்

##~##

வர் ஆட்சியிலும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது திருமாவளவனின் நடவடிக்கைகளில்! அவருடன் உரையாடியதில் இருந்து...  

 '' 'தி.மு.க-வோடு கூட்டு சேர்ந்ததுதான் தோல்விக் குக் காரணம்’ என்கிறது பா.ம.க. அப்படியானால், விடுதலைச் சிறுத்தைகள் தோல்விக்கு என்ன காரணம்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, இதுதான் என்று சொல்ல முடியாது. ஆனால், தோல்விக்கு முழுப் பொறுப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையே சாரும். வேறு யாரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை!''

திராவிடக் கட்சிகள்தான் பா.ம.க-வை பயன்படுத்திக் கொண்டன!

''வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த பா.ம.க-வின் வன்னியர் வாக்குகள் உங்கள் கட்சிக்கு விழுந்து இருந்தால், ஒரு இடத்திலாவது ஜெயித்து இருக்கலாமே?''

''அப்படிப் பார்த்தால், தி.மு.க-வும் தோல்விதானே அடைந்து இருக்கிறது. ஆக, பா.ம.க-வினர் தி.மு.க-வுக்கு வாக்கு அளிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஒட்டுமொத்தமாக எங்கள் கூட்டணிக்கு ஆதரவு இல்லாத ஒரு சூழல் நிலவியதுதான் காரணமே தவிர, பா.ம.க-வினர் வாக்கு அளிக்கவில்லை என்பது அல்ல!''

''அணி மாறும் பா.ம.க-வை நம்பி, அதன் தலைமையில் மாற்று அணி வேண்டும் என்று எப்படி நினைக்கிறீர்கள்?''

''பா.ம.க-தான் மாற்று அணிக்குத் தலைமை தாங்குவதாக வெளிப்படையாக முன்வந்து இருக்கிறது. அணி மாறுவது, வளரும் கட்சி களில் தவிர்க்க முடியாதது.அணிக் குத் தலைமை தாங்கக்கூடிய அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோதான் இதற்குக் காரணம். 2006-ல் நாங்கள் தி.மு.க. அணியில் இருந்தோம். ஆனால், எங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட மாட்டாது என்று கலைஞர் அறிவித்தார். 2009-ல் தேர்தல் பேச்சுவார்த்தைகள்நடந்து கொண்டு இருந்தபோதே எங்க ளுக்கு இடம் இல்லை என்று ஜெயலலிதா பேட்டி அளித்தார். எங்களைப் போன்ற சிறிய கட்சிகளுக்கு இது பெரிய நெருக்கடி. 'விடுதலைச் சிறுத்தைகள் ஏன் அ.தி.மு.க. அணிக்குப் போகவில்லை?’ என்றுதான் கேள்வி கேட்டார்களே தவிர, ஜெயலலிதாவிடம் போய், 'ஏன் அவர்களுக்கு இடம் தரவில்லை?’ என்று யாரும் கேட்கவில்லை. நாங்கள் எந்த அணியில் இருப்பது என்பதை நாங்கள் தீர்மானிக்கவில்லை. தலைமை தாங்குபவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பா.ம.க. அணி மாறுவதை நியாயப்படுத்த வில்லை. வெளியேறுவதற்கான சூழலை திராவிடக் கட்சிகள் ஏற்படுத்திவிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. பா.ம.க - தான் இரண்டு கட்சிகளையும் ஏமாற்றிவிட் டது என்பதைவிட, திராவிடக் கட்சிகள் மாறி மாறி பா.ம.க-வைப் பயன்படுத்திக் கொண்டன என்றும் சொல்லலாம்!''

''உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?''

''உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரட்டும். பார்க்கலாம்!''

''அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது?''

''பிடிவாதமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மீண்டும் சென்றது, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வீடு வழங்கும்திட்டம் போன்றவற்றை மாற்றியது, லட்சக்கணக் கான குழந்தைகளின் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தனி நபர் பிடிவாதத்தால் சமச்சீர்க் கல்விக்குத் தடை போட்டது, செம்மொழி நூலகத்துக்கு நேர்ந்த கதி, நில அபகரிப்பு வழக்குகள் என்கிற பெயரில் எதிர்க் கட்சிகளை, குறிப்பாக, தி.மு.க-காரர்களைக் கைது செய்வது போன்றவற்றைப் பார்த்து, மக்களே இப்போது ஆட்சி குறித்து அதிருப்தியாகப் பேசத் தொடங்கிவிட் டார்கள். வாக்களித்த மக்களின் நம்பிக்கை யைச் சிதைப்பதாகத்தான் இருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி!''

''தமிழின உணர்வாளர்கள் 'தமிழ் ஈழ ஆதரவு’ என்ற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்று நீங்கள் பேசிஇருப்பது எதன் அடிப்படையில்?''

''அ.தி.மு.க., சி.பி.ஐ. கட்சிகள் அங்கு நடக்கும் போர்க் குற்றங்களை எதிர்க்கின்றன. வெளிப்படையாக ஈழத்தையும் புலிகளையும் எதிர்ப்பது காங்கிரஸ். சி.பி.எம். கட்சி அங்கே தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிற அளவில் மட்டும் நிறுத்திக்கொள்கிறது. பா.ஜ.க. போர்க் குற்றங்களைக் கண்டிக்க வேண்டும் என்கிறது.

வெளிப்படையான ஈழ ஆதரவுக் கட்சி களான பா.ம.க-வும் நாங்களும் படு தோல்வி அடைந்து இருக்கிறோம். ம.தி.மு.க. ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா மிக வெளிப்படையாக ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் புலிகளுக்கான தடையை நான் தான் கொண்டுவந்தேன் என்றும் பேசி இருக்கிறார். ஆனால், சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம்

திராவிடக் கட்சிகள்தான் பா.ம.க-வை பயன்படுத்திக் கொண்டன!

நிறைவேற்றியதை நம்பி, இன்றைக்கு அவர்தான் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்கிவிட்டார்கள். பிரபாகரனை, விடுதலைப் புலிகளை ஆதரிக்காமல்... தமிழ் ஈழத்துக்கு ஆதரவு என்கிற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல!''

''விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக எப்படிச் செயல்படுகிறார்?''

''எதிர்க் கட்சித் தலைவராக அவர் பெரிதாக இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்துகொண்டு, அவர் அரசை எதிர்ப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். சமச்சீர்க் கல்வி விஷயத்தில்கூட அவர் அரசை ஆதரிக்கிறாரே! மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்!''