Published:Updated:

பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு பார்சல்!

பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு பார்சல்!
பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு பார்சல்!

பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு பார்சல்!

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.

Representational Image

சென்னை தி.நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு இன்று வெடிகுண்டு பார்சல் ஒன்று வந்துள்ளது. பார்சலில் பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் பார்சலுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அலுவலகத்தை மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

அடுத்த கட்டுரைக்கு