Published:Updated:

அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி - காணாமல் போன கட்சிகள் குறித்த அறிவிப்பு!

அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி - காணாமல் போன கட்சிகள் குறித்த அறிவிப்பு!
அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி - காணாமல் போன கட்சிகள் குறித்த அறிவிப்பு!

அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி - காணாமல் போன கட்சிகள் குறித்த அறிவிப்பு!

'இசை எங்கிருந்து வருது?' 'ஒண்ணு இந்தாருக்கு... இன்னொண்ணு எங்கே?' மாதிரியான கேள்விகளை சினிமாவுல எக்கச்சக்கமா கடந்து வந்திருக்கோம். அதை எல்லாம் சப்ப மேட்டர்னு சொல்ற மாதிரி அரசியல்ல நடக்குற நிகழ்வுகளும், கட்சிகளும் நம்மளை இப்ப கேள்வி கேட்க வைக்குது. அப்படி என்னலாம் கேள்விகள்னு கேக்குறீங்களா? நீங்களே படிங்க. 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, 'அம்மா ஆட்சியைத் தொடர்ந்து அமைப்போம்'ன்னு ஆளாளுக்கு கூவினாங்க. ஆனால், 'அம்மா ஆட்சி இனி சும்மா'தான்ங்கிற அளவுக்கு நிலைமை போயிட்டுருக்கு. அ.தி.மு.க-வை ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, தீபா, மாதவன் அணிகள்ன்னு ஆளாளுக்கு துண்டாடினாங்க. இப்போ தினகரன் அணி வேற புதுசா கிளம்பி இருக்கு. இதுபோக, திவாகரன் அணி வேற ஆன் தி வேயாம். ஆக. அ.தி.மு.க-வை இப்போ யாருதான் வச்சுருக்கா?

அடுத்த கேள்வி கேப்டன் பக்கம்தான். சிங்கம் சிங்கிளாதான் வரும்ங்கிற மாதிரி, ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்பவே, சட்டமன்றத்துல நாக்கை துருத்தி, கண்கள் சிவக்க, கன்னம் துடிக்க,கரன்ட் பாக்ஸ் வெடிக்க டயலாக் பேசி ஆக்‌ஷன் படம் எபெக்ட் கொடுத்தவர் நம்ம கேப்டன். ஆனா, இன்னிக்கு இவ்ளோ கூத்துகள் நடக்குறப்போவும் சத்தம் காட்டாம இருக்கிறது ஏன்னுதான் புரியலை. 'கப்பல் கவிழலாம். கேப்டனே கவிழ்ந்தா எப்படி? அவர் ஏன் அமைதியானார்?' குழப்புதே!.

வைகோவை பத்தி கேள்விகளே இல்லாம எப்படி போகும்? ஈழ விவகாரத்துல ஜெயிலுக்குப் போனார். இளைஞர்கள் ஈழப்பிரச்னையை தெரிஞ்சுக்குறதுக்காக 'எனக்கு ஜாமீனே வேண்டாம்'ன்னு ஜெயிலே கதின்னு கெத்தா இருந்தார். ஆனா, ரஜினி அரசியலுக்கு வரப் போறதா ஒரு புரளி கிளம்பியதும், ஜாமீனை வாங்கி வெளியே வந்தார். ஆனா, ரஜினி திசை மாறி காலாவுல காலை வச்சதும் வைகோ இருக்குற இடம் தெரியாம அமைதியா இருக்கார். 'நீங்க ஏங்க இருபது வருஷ பழைய புரளியை எல்லாம் நம்புனீங்க'னு இப்போ வைகோகிட்ட கேட்க தோணுதே!

அடுத்து, காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்திபவன் பக்கம் போவோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்த வரையாவது, அவர் தினமும் கொடுக்கற அகாஜூகா பேட்டிகள் வழியா காங்கிரஸ் கட்சி லைம்லைட்டுல இருந்தது.  ஆனா, திருநாவுக்கரசர் வந்ததுக்கு அப்புறம், 'காங்கிரஸ் கட்சியா? அது ஆப்ரிக்காலயோ, அண்டார்டிகாலயோ இருக்கும் போல'னு நினைக்க வச்சுட்டார். உண்மையாவே காங்கிரஸ் கட்சி எங்கே சார்? 

திருமாவளவன், ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ எல்லாரும் சேர்ந்துதான் மக்கள் நலக்கூட்டணியை அமைச்சாங்க. வைகோ, 'உங்க கூட டூ'னு பிரிஞ்சு போனப்போ 'அவர் போனா என்ன, நாங்க இருக்கோம்'னு சொன்னாங்க. ஆனா, இவ்வளவு பிரச்னைகள் நடக்குறப்பவும் தனித்தனியா கருத்து சொல்றீங்களே தவிர, கூட்டணி சார்பா எதுவும் சொல்லமாட்றீங்களே? உங்க கூட்டணி இன்னும் இருக்கா இல்லையா?

அடுத்து சமகால நகைச்சுவைக் கலைஞர்கள் தீபா - மாதவன் பக்கம் வருவோம். ஜெயலலிதாவோட அண்ணன் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் தீபா லைம்லைட்டுகே வந்தாங்க. ஆனா, 'அ.தி.மு.கவே என்கிட்டதான்'னு அவங்க போட்ட படம் இருக்கே, அய்யய்யயோ! இதுவே பெரிய கொடுமைன்னா இதைவிட பெரிய கொடுமை தீபாகூட சண்டை போட்டுகிட்டு மாதவன் தனிக்கட்சி ஆரம்பிச்சது. உங்ககிட்ட நாங்க கேட்க வேண்டியது இதுதான் - நீங்க காமெடியை சீரியஸா பண்றீங்களா? இல்ல சீரியஸ்னு நினைச்சு காமெடி பண்றீங்களா?  

இப்படி ஆளாளுக்கு குழப்புனீங்கன்னா கடைசியில 'நான் இப்ப எங்க இருக்கேன்'னு எனக்கு நானே கேட்டுகிட்டு கீழ்ப்பாக்கத்துக்கு போயிடுவேன் போல. பார்த்து பண்ணுங்கப்பா!

அடுத்த கட்டுரைக்கு