Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ரெங்கும் 'கூட்டணிக் குரல்’ உரக்க ஒலிக்கிறது. ஆனால், கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் உதிர்க்கும் சொற்கள், அளிக்கும் விளக்கங்கள், சொடுக்கும் சவால்கள் அனைத்தும் ஒரு சூதாட்டக்காரனின் வார்த்தைஜாலங்களையே நினைவூட்டுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தலுக்கு முன்பு ஓட்டு வாங்க ஒரு கூட்டணி; வெற்றி பெற்றதும் ஆட்சி அமைக்க ஒரு கூட்டணி என்ற பச்சோந்திப் பண்பையே தங்கள் பண்பாடாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் இன்றைய அரசியல்வாதிகள். காங்கிரஸைத் திட்டி ஓட்டுக் கேட்டவர்கள், தேர்தலுக்குப் பிறகு அதே காங்கிரஸுக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 'பாரதிய ஜனதாவுக்கு மதவெறி’ என்று கண்டித்து வாக்கு அறுவடை நடத்துபவர்கள், மோடிக்கு முட்டுக்கொடுக்க மாட்டார்கள் என உறுதி கூற முடியுமா? அதை அவர்கள் 'அரசியல் சாமர்த்தியம்’ என்பார்கள். ஆனால், அது பச்சையான 'அரசியல் சந்தர்ப்பவாதம்’!

கூட்டணி குறித்த இவர்களின் செயற்குழு, பொதுக்குழு விவாதங்களைப் பாருங்கள். 'யாருடன் சேர்வது? எத்தனை சீட்?’ என்பதுதான் பேசுபொருளாக இருக்கிறதே ஒழிய, கொள்கை என்பது பெயர் அளவுக்குக்கூட இல்லை. ஆக, 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை’ என்பதே அனைத்துக் கட்சிகளின் ஒரே கொள்கை. கட்சிக் கொடிகளில் இருக்கும் நிறங்களைத் தவிர, அரசியல் கட்சிகளுக்கு இடையில் வித்தியாசங்களே இல்லை.

முன்பு 'குறைந்தபட்ச செயல்திட்டம்’ என்று ஒன்றைப் பேச்சுக்கேனும் குறிப்பிடுவார்கள். ஆனால், இப்போது அந்தச் சொல்லையும் கேட்க முடிவது இல்லை. இந்த சமயத்தில்தான், வாக்காளர்களுக்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் தேவையாக இருக்கிறது!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களை நோக்கி அணிவகுத்து வரும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, முளைவிடத் துடிக்கும் மூன்றாவது அணியாக இருந்தாலும் சரி... 'மக்களுக்கு குறைந்த தீங்கிழைப்போர் யார்?’ என்று கண்டறிவதே இப்போது வாக்காளர்களின் முன் இருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டம். எனினும், இந்த ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்டோர் கையில் இருக்கும் இறுதி ஆயுதமும் வாக்குச்சீட்டுதான்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் மாண்புகளைத் தக்கவைத்துக்கொள்ள நம்மிடம் எஞ்சியிருக்கும் இறுதி ஆயுதம். அதை மிகக் கவனமாகக் கையாள்வோம். நம்மை நோக்கி வரும் அரசியல் கூட்டணிகளின் உண்மை நிறத்தை மேலும் எச்சரிக்கையுடன் பரிசீலிப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism