Published:Updated:

திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!

திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!
திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!

திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டு, நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் உள்ளதாகக் கூறி நேற்று இரவு சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் அவர். மலேசிய விமான நிலையத்திலேயே தனி அறையில் உட்கார வைக்கப்பட்டு, அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புகொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பி அனுப்பப்பட்ட வைகோ: கண்டனம் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்!

இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 'மலேசிய அரசு வைகோவை நடத்திய விதம் அதிர்ச்சியளிக்கிறது. முறையாக விசா பெற்று ஒரு நாட்டுக்குள் சென்றவரை தனிஅறையில் அமரவைத்தது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய வெளியுறவுத்துறை மலேசிய அரசிடம் விசாரித்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்', என கூறியுள்ளார் தினகரன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், வைகோவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 'மலேசிய விவகாரத்தில் அனைத்து தரப்பினருக்கும் எனக்கு ஆதரவளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி', என மதுரையில் வைகோ பேட்டியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு