Published:Updated:

75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானிலுள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்ற 92 வயது மூதாட்டி!

இந்தியா - பாகிஸ்தான் ( ட்விட்டர் )

இந்தியாவில் வசிக்கும் 92 வயதான மூதாட்டி ஒருவர் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானிலுள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்றிருப்பது குறித்து உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் வசித்துவருபவர் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவருக்குச் சொந்தமான பூர்வீக வீடு பாகிஸ்தானில் இருக்கிறது. இவர் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கும் தனது பூர்வீக வீட்டுக்குச் சென்றிருப்பதாக நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானிய தூதரகம் நல்லெண்ண நடவடிக்கை மூலம், அந்த மூதாட்டிக்கு மூன்று மாத கால விசா வழங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலுள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியே நேற்று முன்தினம் ரீனா புறப்பட்டார்.1947-ம் ஆண்டில் ரீனாவின் குடும்பம் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 17.

75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானிலுள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்ற 92 வயது மூதாட்டி!

இந்த நிலையில், இது தொடர்பாக ரீனா தெரிவித்திருப்பதாவது, "பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் எங்களது குடும்பம் வசித்துவந்தது. என்னுடைய மனதிலிருந்து என் பூர்வீக வீடு, பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகள் என யாரையும் நீக்க முடியாது. என்னுடசிய சகோதரிகளுக்கு தோழிகள் இருந்தனர். அவர்களில் சிலர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் எங்களுடைய வீட்டுக்கு வந்துள்ளனர்’’ என்றார்.

கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல ரீனா விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக அவரால் அனுமதி பெற முடியவில்லை. தற்போது அவர் சென்றிருக்கும் நிலையில், திரும்பி வருவதற்கு ஏற்றவாறு இரண்டு நாடுகளும் விசா நடைமுறைகளைத் தளர்த்துவதற்கான பணிகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!