Published:Updated:

’ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்வோம்’: ஸ்டாலின் அறிவிப்பு!

’ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்வோம்’: ஸ்டாலின் அறிவிப்பு!
’ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்வோம்’: ஸ்டாலின் அறிவிப்பு!

'தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. தனது மக்கள் பணியைத் தொடரும்' என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குளங்களைத் தூர் வாரும் பணியை மேற்கொண்டுவரும் ஸ்டாலின், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணியைத் துவக்கிவைத்தார். தூத்துக்குடியின் சில்வார்புரம் பகுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘தமிழகத்தின் அத்தனை பொதுத்துறைகளும் செயலற்றுள்ளன. ஆனால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. தனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது. பல்வேறு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்காமல் மவுனம் சாதித்துவருகிறது, தமிழக அரசு’ எனக் கூறினார்.

மேலும், ‘மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைக்கூட தி.மு.க. கவனம் எடுத்து செயலாற்றிவருகிறது. தற்போது, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, திமுக-வினர் குளங்களைத் தூர் வாரும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோல பலவற்றையும் தொடர்ந்து செயலாற்றுவோம்’ எனக் கூறினார்.