Published:Updated:

விழா தொடங்கும் முன்பே கிழித்து எறியப்பட்ட முதல்வர் பழனிசாமி பேனர்!

சகாயராஜ் மு
விழா தொடங்கும் முன்பே கிழித்து எறியப்பட்ட முதல்வர் பழனிசாமி பேனர்!
விழா தொடங்கும் முன்பே கிழித்து எறியப்பட்ட முதல்வர் பழனிசாமி பேனர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் சபாநாயகர் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்செய்து, நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு உதவிகளையும் வழங்கிவருகிறார்.  சமீபத்தில் கோவை, புதுக்கோட்டை,  மற்றும் ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார். முதல்வர் வருகையையொட்டி பேனர்கள், கட்சிக்கொடிகள், தோரணங்கள் என அமர்க்களப்படுத்தினர் அவரது ஆதரவாளர்கள்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் அவநாசியில் இன்று, தமிழக அரசு சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி, முதல்வர் பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரின் பேனர்கள், கட்சிக்கொடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

விழா நடைபெற உள்ள நிலையில், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நலத்திட்டம் வழங்கும் விழாவுக்காக வைக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரனின் ஆதரவாளர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டார்களாக என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அவிநாசியில் சில மாதங்களுக்கு முன்பு, சபாநாயகர் தனபாலின் அலுவலகம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.