Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க-வில் புதிய அணி! - அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க-வில் புதிய அணி! - அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க-வில் புதிய அணி! - அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க-வில் புதிய அணி! - அன்பழகன் அறிவிப்பு

வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில், அரசியல் கட்சிகளும் அதற்குத் தகுந்தவாறு தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில், 'தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி' என்ற புதிய துணை அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதை, தி.மு.க-வின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். 

தி.மு.க-வில் புதிய அணி! - அன்பழகன் அறிவிப்பு

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் காலத்திற்கேற்ற வகையில், அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரைந்து கொண்டுசெல்லும் வகையில், 'தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி' எனும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏனைய நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு