Published:Updated:

ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வது பா.ஜ.க.வில் இந்த மூன்று பேர்தான்!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வது பா.ஜ.க.வில் இந்த மூன்று பேர்தான்!
ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வது பா.ஜ.க.வில் இந்த மூன்று பேர்தான்!

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவுசெய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை பா.ஜ.க தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வது பா.ஜ.க.வில் இந்த மூன்று பேர்தான்!


குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் நஸீம் ஜைதி அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளருக்கான தேர்வில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஏற்கெனவே, எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை முன்னிறுத்த முடிவுசெய்துள்ளன. இதையடுத்து, பா.ஜ.க தன்னுடன் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வேட்பாளரை முடிவுசெய்ய உள்ளது.

இதற்காக பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் வெங்கைய நாயுடு ஆகியோர் உள்ளனர். அவர்கள், கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரைத் தேர்வுசெய்யவுள்ளனர்.