Published:Updated:

சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

Published:Updated:
சீனாவின் ரேடார்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் ரகசியங்கள் கசியுமா?

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரேடார்களை இந்தியாவில் நிறுவியதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியத் தகவல்கள் களவாடப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.  

2012 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பழைய மாடல் ரேடார் கருவிகளை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ‘எஸ்-பாண்டு’ வகையைச் சேர்ந்த ‘டாப்ளர் வெதர் ரேடார்’ கருவிகளை அமைத்தார்கள். அதன்படி சென்னை, நாக்பூர், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட 9 இடங்களில் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டன. இந்த டாப்ளர் வெதர் ரேடார் சீன நாட்டின் தயாரிப்பாகும். இந்த ரேடார் மூலம் 500 கி.மீ. தூரம் வரை வானிலையை துல்லியமாக கண்டறியமுடியும். புயல் எங்கு உருவாகிறது? எந்த திசையில் எவ்வளவு கி.மீ. வேகத்தில் நகரும்? எந்த நேரத்தில் எந்த இடத்தில் கரையை கடக்கும்? அதனால் எந்தமாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்த ரேடார் துல்லியமாக கண்டறியும் தன்மை கொண்டது.  இதனைத் தொடர்ந்து, இதே வகை ரேடார்களை கோவா, ஒரிசா மாநிலத்திலுள்ள பாரதீப் மற்றும் காரைக்கால் ஆகிய கடலோரப் பகுதிகளில் நிறுவ முன்வந்தபோது இதற்கு இந்திய கடற்படை அனுமதிதர மறுத்துவிட்டது.  

இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத்துறை அதிகாரி , “சீனா நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு வகையில் இன்றுவரை இடையூறு கொடுத்து வரும் நாடு. அத்துடன், பகைநாடான பாகிஸ்தானுக்கு எல்லா வகையிலும் ஆதரவு தரும் நாடு. நமக்கு அருகாமையில் இலங்கையில் கடற்படைதளம் அமைக்க முயற்சித்து வரும் நாடு. அப்படிப்பட்ட நாட்டிடமிருந்து அதி நவீன ரேடார்களை வாங்கி நம்நாட்டில் அமைப்பது நமக்குநாமே கொள்ளி வைத்துக்கொள்வதற்குச் சமம். ஒரு ரேடாரின் விலை 15 கோடி. 2012ல் வந்த ரேடாரை அமைப்பதற்கு கடற்படை எதிர்ப்பு தெரிவித்ததால் 2015 வரை கிடப்பில் கிடந்தது. அதன்பின் வானிலை ஆய்வுக்கு மட்டும் இரண்டு சர்வரை கொண்டு பயன்படுத்துகிறோம். வேறு எந்தத் தகவலும் வெளியில் கசிய வாய்பில்லை என்று சமாதானம் சொல்லி ஒப்புதல் பெற்றார்கள். ஆனால், அந்த இரண்டு சர்வரின் ரகசிய எண்கள் சீனாவுக்கும் தெரியும். அதனைப் பயன்படுத்தி நமது நாட்டு ரகசியங்களை அறிவதற்கு வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. இதில் பழுது ஏற்பட்டாலோ, உதிரிபாகம் தேவைப்பட்டாலோ சீனாவைத்தான் நாம் நாட வேண்டும். எனவேதான் எதிரி எந்த வகையிலாவது நமக்கு இடையூறு செய்யக்கூடும் என்று கடற்படை எதிர்த்தது” என்றார்.  
இந்தச் சூழ்நிலையில், காரைக்கால் டாப்ளர் வெதர் ரேடார் நிலையத்தில் செயல்பட்டுவந்த ரேடாரின் ‘ஹார்டுவேர்’ பழுதடைந்தது. இதனால் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ரோடர் செயல்படவில்லை. இந்த உபகரணம் சீனாவில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் அதனைப் பெறுவதற்கு நிர்வாக ரீதியில் பலசிக்கல் இருந்தன. துறை ரீதியான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 25 ஆம் தேதிமுதல் மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறது.  

இதுகுறித்து காரைக்காலில் உள்ள ரேடார் நிலைய மேலாளர் சாலமனிடம் பேசினோம், “புயல், மழை குறித்து தட்பவெப்பநிலையை துல்லியமாக அறிய மட்டுமே இரண்டு சர்வர்கள் மூலம் இந்த ரேடார் பயன்படுத்தப்படுகிறது.  இதனை பயன்படுத்தவும், பழுது நீக்கவும் சீனா சென்று பயிற்சி பெற்றதில் நானும் ஒருவன். ரேடாரின் உதிரிப்பாகங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதில் கடும் கட்டுப்பாடு இருக்கிறது. துறை ரீதியாக முயற்சிசெய்து கடந்த 24 ஆம் தேதிதான் உதிரிபாகம் வந்தது. டெல்லியிலிருந்து வானிலை நிலைய பொறியாளர் பழுதுநீக்கி கொடுக்க ரேடார் செயல்படுகிறது” என்று முடித்துக்கொண்டார்.