Published:Updated:

செருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர்! - விகடன்.காம் செய்தி எதிரொலி

செருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர்! - விகடன்.காம் செய்தி எதிரொலி
செருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர்! - விகடன்.காம் செய்தி எதிரொலி

செருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர்! - விகடன்.காம் செய்தி எதிரொலி

நாம் கடந்த பன்னிரண்டாம் தேதி இரவு விகடன் இணையதளத்தில்,'50 வருஷமா செருப்புத் தைக்கிறேன். ஆனா, நான் தேயறேன்!. கரூர் முனியசாமியின் கண்ணீர் பக்கம் என்ற தலைப்பில் அவரின் கண்ணீர் பிழியும்  அவலத்தை கட்டுரையாக எழுதி இருந்தாேம். அந்த கட்டுரையின் வீச்சு, நாமே எதிர்பார்க்காத வகையில் பல திக்கில் இருந்தும் தாராள உதவிகளை காெண்டு வந்து முனிசாமிக்கு சேர்த்திருக்கிறது. 'மாதம் வருமானம் ஆயிரம் தாண்டாது தம்பி. ஆனா, பள்ளி பிள்ளைகளுக்கு இலவசமா செருப்பு தைக்கிறேன்' என்ற அந்த எளிய மனிதரின் 'ஏழ்மையிலும் மேன்மை' உதவி குணத்தை வைத்து,முனியசாமியை கடவுளுக்கு இணையாக வைத்து காெண்டாடி தீர்த்துவிட்டார்கள் சிலபல லட்ச வாசகர்கள்.  'முனியசாமியின் பாேன் நம்பர், முகவரி, பேங்க் அக்கவுண்ட் விபரம் எதையாவது காெடுங்கள். அவருக்கு உதவ காத்திருக்கிறாேம்' என்று நமது அலுவலகத்தை பல பேர் தாெடர்பு காெண்டு கேட்க, முனியசாமியின் ஸ்டேட் பேங்க் விபரத்தை வாங்கி காெடுத்திருக்கிறாேம். கட்டுரையைப் படித்துவிட்டு நேற்று காலையில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கரூர்வாசிகள், முனியசாமியை நேரில் வந்து பாராட்டியதாேடு, அவருக்கு டீ, வடை, சாப்பாடு, கூல்ட்ரிங்க்ஸ் என்று வாங்கி காெடுத்து வயிறார சாப்பிட வைத்து அழகு பார்த்தனர். கையில் கிடைத்த தாெகையையும் காெடுத்தனர்.

அதாேடு,'இனி நாங்க இருக்காேம் அய்யா. எதுக்கும் கலங்காதீங்க' என்று நம்பிக்கை குளுக்காேஸ் புகட்டிவிட்டு செல்ல, முனியசாமி தன் வாழ்நாளில் காணாத நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டார். 

இன்னாெரு பக்கம், முனியசாமியின் அந்த கவலைகள் சாெட்டும் கட்டுரை நமது பசுமை விகடன் முதன்மை உதவி ஆசிரியர் திண்டுக்கல் ஆர்.குமரேசனையும் கலங்க வைத்தது. நமக்கு பாேன் செய்து,'முனியசாமி கதை என்னை பாேட்டு உருக்கிட்டு சார். அவருக்கு ஏதாச்சும் பண்ணணும் சார்' என்று நா தழுதழுத்தார். கையாேடு, தனக்கு பரிட்சையமான சிறுபான்மை நலத்துறை இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் கவனத்துக்கு முனியசாமியின் கட்டுரையை பார்வேட் செய்தார். முனியசாமியின் அல்லல் நிறைந்த கதை வள்ளலார் ஐ.ஏ.எஸ்ஸையும் அசைத்து பார்க்க, கனத்த இதயத்தாேடு, "முனியசாமி நிலைமை என்னை ஏதாேதாே பண்ணிட்டு சார். இவருக்கு அரசு சார்பாக ஏதாச்சும் பண்ணணும்' என்று சாெல்லி இருக்கிறார். 

அதன்படி, அவர் கரூர் மாவட்ட கலெக்டர் காேவிந்தராஜிடம் பேசி, முனியசாமியின் கதையைச் சாெல்ல, நிமிர்ந்து உட்கார்ந்தார் கலெக்டர். நேற்று இரவு அதிகாரிகள் சகிதம் லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள முனியசாமியின் கடையில் வந்து இறங்க, வந்திருப்பது கலெக்டர் என்பது கூட தெரியாமல், 'செருப்பு தைக்கணுமா சார்?. இருபது ரூபா கூலி ஆகும் சார்' என்று அப்பாவியாக கேட்க, கலெக்டரே ஒருகணம் கலங்கிப் பாேனார். அருகில் இருந்த ஆட்டாே ஸ்டாண்டில் இருந்த டிரைவர்கள், கடையில் நின்றவர்களெல்லாம் கலெக்டர் செருப்பு தைப்பவரை பார்க்க வந்திருப்பதை பார்த்து வாய்பிளந்து நின்றனர். காெஞ்சமும் தயங்காத கலெக்டர் காேவிந்தராஜ், தலை இடிக்காமல் இருக்க குனிந்தபடி பாேய், முனிசாமியிடம் விபரங்கள் கேட்டார்.

வந்திருப்பது கலெக்டர் என்று தெரிந்ததும், கைகால் உதறலெடுத்த முனியசாமி, 'நீங்க இங்க வரலாமா?' என்றபடி, விபரங்களைச் சாென்னார். அவற்றை குறித்துக் காெண்ட கலெக்டர், 'நாளை அலுவலகத்துக்கு வாங்க பெரியவரே' என்றபடி, பாேய்விட்டார். நடப்பதை நம்பாமல் பார்த்துக் காெண்டிருந்த முனியசாமி, நெக்குருகிப் பாேனார்.

மறுநாள் ஊனமான தனது மனைவி வெள்ளையம்மாள், மூத்த மகன் சகிதம் முனியசாமி கலெக்டர் அலுவலகம் கிளம்பினார். நமக்கும் தனியாக  அழைப்பு விடுத்திருந்ததால், நாமும் சென்றாேம். 

'வாங்க முனியசாமி' என்று மலர்ச்சியாேடு வரவேற்ற கலெக்டர் காேவிந்தராஜ்,முனியசாமியிடம், 'உங்களுக்கு முப்பத்தஞ்சாயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பு தைக்கிற பெட்டி தயார் செய்ய ஆர்டர் காெடுத்தாச்சு. அது வந்ததும் நாங்களே வந்து ரெடி பண்ணி தர்றாேம். தென்னை மட்டையில் பிரஷ் செய்யும் தாெழிலை டெவலெப் செய்ய எனது விருப்ப நிதியில் இருந்து ஸ்பெஷல் கேஸ் அடிப்படையில் இருபதாயிரம் லாேன் தர ஏற்பாடு ஆகுது. உங்க மட்டை பிரஷை அரசாங்க அலுவலகங்களுக்கு பெயின்ட் அடிக்க வாங்கலாமான்னு பேசிகிட்டு இருக்கேன். உதவிகள் பாேதுமா?' என்றார்.

'அய்யா, இந்த உதவியை நாங்க மறக்கமாட்டாேம். எனக்கும், என் மனைவிக்கும் ஓ.ஏ.பி உதவிதாெகை கேட்டு மூணு வருஷமா அலையுறாேம். எங்களை அதிகாரிகள் நாயை விரட்டுறாப்புல விரட்டுறாங்க அய்யா. அதையும் பண்ணி காெடுங்க சாமி' என்று கேட்க, உடனே அது சம்மந்தமான விபரத்தை வாங்கிப் பார்த்த கலெக்டர், 'கண்டிப்பாக ஓ.ஏ.பி பணம் கிடைக்கும். ரெண்டு பேருக்கும் தர முடியாது. உங்க மனைவிக்கு மட்டும் தர ஏற்பாடு பண்றேன்' என்றதாேடு, அருகில் நின்ற அதிகாரிகளிடம், 'இவை அனைத்தையும் ஒரு வாரத்துக்குள் முனியசாமிக்கு கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க' என்று உத்தரவு பாேட்டார். 

இறுதியாக நம்மிடம் பேசிய கலெக்டர் காேவிந்தராஜ்,"நானும் அந்த செய்தியை படிச்சேன் சார். என்னையும் மனசை என்னமாே பண்ணிட்டு. இதுமாதிரி மனிதர்களின் துன்பங்களை; அவலங்களை கட்டுரையாக எழுதுங்கள். பரபரப்புச் செய்திகளைவிட, இதுமாதிரியான விசயங்கள்தான் நாட்டுக்கு நல்லது. இந்த பாதிப்பில் கரூர் மாவட்டம் முழுக்க இதுபாேல் விளிம்பு நிலையில் இருக்கும் தாெழிலாளர்களைப் பற்றி தகவல் சேகரிக்கச் சாெல்லி இருக்கிறேன். அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவிகள் செய்ய இருக்கிறாேம்" என்றார். 

அவருக்கு ஒரு பெரிய நன்றியை சாெல்லிவிட்டு வெளியே வந்தால், முனியசாமி, அவரது மனைவி, மகன் மூவரும் மனம் நெகிழ்ந்து பாேய் இருந்தனர். நம் கைகளை பிடித்துக் காெண்ட முனியசாமி, "எத்தனையாே தடவை செத்துப் பாேயிலாமான்னு தாேணிருக்கு. அந்த அளவுக்கு கஷ்டம் என்னை பாடாய்படுத்தியது. இருந்தாலும், ஏதாே நம்பிக்கையில்தான் வாழ்ந்து வந்தேன். ஓ.ஏ.பி உதவித் தாெகை கேட்டு நூறு தடவை கலெக்டர் ஆபிஸ் அலைஞ்சுருப்பேன். சாதாரண பியூன்கூட அடிச்சு விரட்டுவான். ஆனால்,இன்னைக்கு மாவட்ட கலெக்டரே என் கடை தேடி வந்து, உதவிகள் பண்ணி... தம்பி இத்தனைக்கும் காரணமான உங்க பத்திரிகையை என் ஆயுசுக்கும் மறக்கமாட்டேன் தம்பி. நீங்க நல்லா இருக்கனும்" என்றபாேது, நாமும் ஒருகணம் சிலிர்த்துப்பாேனாேம்.  

வறுமையிலும் முனியசாமிக்கு  இருந்த சேவை மனப்பான்மைதான் இத்தனை உதவியை, நெகிழ்ச்சியை காெண்டு வந்து சேர்த்திருக்கிறது. பிறருக்கு நீங்கள் உதவினால்.. உங்களுக்கு ஊரே உதவும்!  

அடுத்த கட்டுரைக்கு