Published:Updated:

தமிழகத்தில் எய்ம்ஸ்: பொன்முடி கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி!

அஸ்வினி.சி
தமிழகத்தில் எய்ம்ஸ்: பொன்முடி கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி!
தமிழகத்தில் எய்ம்ஸ்: பொன்முடி கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி!

'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுவருகிறது. சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர் பொன்முடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதுகுறித்து கேள்வியெழுப்பினார். 

தமிழகத்தில் எய்ம்ஸ்: பொன்முடி கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி!

அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சாதகமாக இருந்ததால், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை மத்திய அரசிடம் பரிந்துரைத்தோம். ஆனால், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. செங்கிப்பட்டியை மத்தியக் குழு நிராகரித்துவிட்டது. தஞ்சாவூர் செங்கிப்பட்டி, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை பால்பண்ணை ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்தோம். ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு’ என்றார்.